search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் தேர்தல் - காங்கிரஸ் சார்பில் அசோக் கேலாட், சச்சின் பைலட் வேட்பு மனு தாக்கல்
    X

    ராஜஸ்தான் தேர்தல் - காங்கிரஸ் சார்பில் அசோக் கேலாட், சச்சின் பைலட் வேட்பு மனு தாக்கல்

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட், அம்மாநில கட்சி தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். #VasundharaRaje #Rajasthanpolls #SachinPilot #AshokGehlot #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை  கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ராபட்டான் தொகுதியில் கடந்த 16-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    கடந்த 1985-ம் ஆண்டு முதன்முதலாக தோல்பூர் தொகுதியில் சட்டசபை தேர்தலை சந்தித்து வெற்றிபெற்ற வசுந்தரா, பின்னர் 1989 முதல் 2003 வரை ஜல்வார் பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.


    தற்போது, ஜல்ராப்பட்டான் தொகுதி எம்.எல்.ஏ.வாக இவர் வெற்றி பெற்றால் ஐந்தாவது முறையாக அம்மாநில சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட் சர்தார்புரா தொகுதியிலும், அம்மாநில கட்சி தலைவர் சச்சின் பைலட் டோங் தொகுதியிலும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.  #VasundharaRaje #Rajasthanpolls #SachinPilot #AshokGehlot #SachinPilot
    Next Story
    ×