search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை தந்த மர்ம காய்ச்சல் - உ.பி.யில் 42 பேர் பலி
    X

    மழை தந்த மர்ம காய்ச்சல் - உ.பி.யில் 42 பேர் பலி

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழையை தொடர்ந்து பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #UPRain
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், பல ஆயிரம் மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர்.

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்தே இன்னும் மீண்டுவராத உ.பி. மக்கள் தற்போது மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர், பாரியெல்லி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இந்த மர்ம காய்ச்சல் மக்களை பாதித்து வருகிறது. மர்ம காய்ச்சலினால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் குறித்து ஆராய்ச்சிகள் நடந்துவரும் நிலையில், முதற்கட்டமாக காய்ச்சல் வரும் முன் செய்யவேண்டியவை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக பேசிய உத்தரப்பிரதேச மாநிக சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த்நாத் சிங், 3 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த காய்ச்சல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உடனடியாக காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #UPRain
    Next Story
    ×