search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக விசாரணை குழு 2 மாதங்களில் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    X

    பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக விசாரணை குழு 2 மாதங்களில் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    நாடு முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விசாரணை குழுவை 2 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என அனைத்து ஐகோர்ட்டுகளுக்கும் சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரே மாவட்ட கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது சில வழக்கறிஞர்கள் தன்னை தாக்கியதாக பெண் பயிற்சி வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இன்று விசாரித்தனர்.

    வழக்கு விசாரணையின் போது, 2013-ம் ஆண்டு இயற்றப்பட்ட நாட்டில் உள்ள அனைத்து ஐகோர்ட், மாவட்ட கோர்ட்டுகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விசாரணைக்குழு இரண்டு மாதங்களில் அமைக்க வேண்டும் என அனைத்து ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    டெல்லி ஐகோர்ட் மற்றும் டெல்லியில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் ஒரே வாரத்தில் இந்த விசாரணை குழு அமைக்க வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

    பெண் வழக்கறிஞர் அளித்த புகாரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், பட்டியாலா ஹவுஸ் கோர்ட்டுக்கு வழக்கு விசாரணையை மாற்றினர். மேலும், பார் கவுன்சிலை சேர்ந்தவர்கள் இந்த வழக்கு விசாரணையில் தலையிட வேண்டாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    2013-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் மற்றும் உடல்ரீதியிலான தொந்தரவுகளை தடுக்க பணியிடங்களில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்பதாகும். #SupremeCourt
    Next Story
    ×