search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திட்டமிடப்பட்ட பேச்சோ உயர் அதிகாரிகளோ இல்லை - மோடி ஜின்பிங் இருவர் மட்டுமே
    X

    திட்டமிடப்பட்ட பேச்சோ உயர் அதிகாரிகளோ இல்லை - மோடி ஜின்பிங் இருவர் மட்டுமே

    கடந்த காலங்களை போல திட்டமிடப்பட்ட பேச்சுகள், கூட்டு செய்தியாளர் சந்திப்பு, சுற்றிலும் அதிகாரிகள் என நாளைய கூட்டத்தில் எதுவும் இல்லை. மோடி - ஜின்பிங் இருவர் மட்டுமே. #PMModi #XiJinping
    புதுடெல்லி:

    பிரம்மாண்ட கூட்ட அரங்கம், சுற்றிலும் உயரதிகாரிகள், எது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தை, சந்திப்பு முடிந்த உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பது ஆகிய வழக்கமான எதுவும் நாளை நடக்க உள்ள மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் கிடையாது.

    மோடியின் இந்த திடீர் சீன பயணமே முன்பே திட்டமிடப்படாத ஒன்றுதான். டோக்லாம், பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் மோடி பேச உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், நிஜத்தில் என்ன பேசுகிறார்கள் என யாருக்கும் தெரிய போவது இல்லை. ஏனென்றால், நடக்கப்போகும் கூட்டம் அப்படி.

    நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் மோடி மற்றும் ஜி ஜின்பிங் தனியே சந்தித்து பேச உள்ளனர். தனியே என்றால் அவர்கள் இருவர் மட்டுமே தான். பேச்சுவார்த்தையில் மொழி சிறிய தடையாக இருக்கும் என்பதால் சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மதுசூதன் மற்றும் அந்த அறையில் இருப்பார்.

    இரு தலைவர்களுக்கும் இடையே அவர் மொழி பெயர்ப்பாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் விவகாரம் குறித்து மோடி பேசுவார் என டெல்லி வட்டாரங்கள் கூறியுள்ளன. #PMModi #XiJinping
    Next Story
    ×