search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. - காங்கிரசை வீழ்த்த அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒரே அணியில் வர வேண்டும் - தேவேகவுடா
    X

    பா.ஜ.க. - காங்கிரசை வீழ்த்த அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒரே அணியில் வர வேண்டும் - தேவேகவுடா

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசையும், பாரதிய ஜனதாவையும் வீழ்த்த வேண்டும் என்றால் அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒரே அணியில் வர வேண்டும் என்று தேவேகவுடா கூறியுள்ளார். #KarnatakaElection2018
    பெங்களூர்:

    முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவேகவுடா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினை மாநிலத்தின் முக்கிய விவகாரமாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா மேலும் பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.

    மத்திய நிதி கமி‌ஷனால் கர்நாடகா பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசால் அனைத்து வகையிலும் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. மாநில கட்சிகள் தங்களை காப்பாற்றி கொள்வதற்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அடுத்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசையும், பாரதிய ஜனதாவையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும் என்றால் அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒரே குடையின் கீழ் வர வேண்டும். அப்படி ஒரு முன்னணியை அமைக்க சக்தி கொண்டவனாக நான் இல்லை. அதற்கு உரிய ஆதரவை என்னால் கொடுக்க முடியும்.

    எங்களை பொறுத்த வரை மாநில அளவில் காங்கிரசையும், பாரதிய ஜனதாவையும் ஒரே தூரத்தில் வைத்துதான் பார்க்கிறோம். தேசிய அரசியல் என்று வரும் போது இதில் மாறுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் முதன்மை இடத்தை பிடிக்கும் என்று சொல்லமுடியாது. நாங்கள் வலுவான இடத்தை பிடிப்போம்.

    அதே நேரத்தில் மோடி சுனாமி வீசுவதாக கூறுகிறார்கள். அப்படி எதையும் நான் பார்க்கவில்லை. தேசிய அளவில் இந்த ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன. நீதித்துறை செயல்பாடுகள், பாராளுமன்ற செயல்பாடுகள் இவை எல்லாம் கவலையை தருகின்றன.

    பாரதிய ஜனதா அரசும் சரி, காங்கிரஸ் அரசும் சரி. எல்லா வகையிலும் தோல்வியில் தான் முடிந்துள்ளன.

    இவ்வாறு தேவே கவுடா கூறினார். #KarnatakaElection2018 #DeveGowda
    Next Story
    ×