search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகா தேர்தல் - இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க
    X

    கர்நாடகா தேர்தல் - இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 82 பெயர்கள் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. #KarnatakaAssemblyElections
    புதுடெல்லி:

    கர்நாடக மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பா.ஜ.க ஆட்சியை பிடிக்கவும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் 72 பெயர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டிருந்தது.

    நேற்று, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க தேர்தல் கமிட்டி கூட்டம் நடந்தது. அப்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், 82 பெயர்கள் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அக்கட்சி வெளியிட்டுள்ளது.

    நேற்று மாலை 218 பெயர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #KarnatakaAssemblyElections #BJP #TamilNews
    Next Story
    ×