search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடம் கிடைத்த பிறகும் உயர்மருத்துவ படிப்பில் சேராவிட்டால் அபராதம்
    X

    இடம் கிடைத்த பிறகும் உயர்மருத்துவ படிப்பில் சேராவிட்டால் அபராதம்

    நடப்பாண்டு முதல் உயர் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தும் சேராத மாணவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
    புதுடெல்லி:

    மருத்துவ கல்லூரிகளில் உயர் பட்டப்படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இடங்கள் காலியாக கிடப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

    உயர்படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் இடம் கிடைத்ததற்கு பிறகு அதில் சேராமல் இருந்துவிடுவதே இதற்கு காரணம் ஆகும்.

    இவ்வாறு கடந்த ஆண்டு மட்டுமே 1400 மருத்துவ உயர் படிப்புகள் காலியாக இருந்துள்ளன. இதனால் அரசுக்கு பெரும் நிதிஇழப்பு ஏற்படுகிறது.

    இதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் இவ்வாறு சேராத மாணவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

    இதன்படி அரசு மருத்துவ கல்லூரியில் உயர் படிப்பில் சேர விண்ணப்பிப்பவர்கள் ரூ.25 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும். நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேர விண்ணப்பிப்பவர்கள் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும்.

    அவர்கள் 2-வது கவுன்சிலிங் முடிந்ததற்கு பிறகு இந்த இடங்களில் சேரவில்லை என்றால் அவர்கள் செலுத்திய பணம் பறிமுதல் செய்யப்படும். அதாவது அபராதம் என்ற முறையில் அந்த பணத்தை எடுத்துக்கொள்வார்கள்.

    இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக மருத்துவ துறை அதிகாரிகள் கூறினார்கள். #Tamilnews
    Next Story
    ×