search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இனி தேர்தலில் போட்டி இல்லை - உமாபாரதி அறிவிப்பு
    X

    இனி தேர்தலில் போட்டி இல்லை - உமாபாரதி அறிவிப்பு

    இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன், மத்தியபிரதேச முதல்-மந்திரி பதவியையும் நான் விரும்பவில்லை என்று மத்திய மந்திரி உமாபாரதி அறிவித்துள்ளார்.
    ஜான்சி:

    மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மீது அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.

    எனவே இந்த தேர்தலில் மத்திய மந்திரியும், பெண் சாமியாருமான உமாபாரதியை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே உமாபாரதி முதல்-மந்திரியாக இருந்துள்ளார். எனவேதான் அவரை மீண்டும் முதல்-மந்திரியாக்க பா.ஜனதா கட்சி விரும்புவதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் உமாபாரதி இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன், மத்தியபிரதேச முதல்-மந்திரி பதவியையும் நான் விரும்பவில்லை என்று அறிவித்துள்ளார்.

    இனி வருங்கால தேர்தல்களில் போட்டியிடுவது இல்லை என்று நான் முடிவெடுத்திருக்கிறேன். இதுசம்பந்தமாக நான் ஏற்கனவே கட்சி தலைவர்களிடம் கூறிவிட்டேன். என்னை மறுபடியும் தேர்தலில் போட்டியிட வற்புறுத்த வேண்டாம் என்று அவர்களிடம் தெரிவித்திருக்கிறேன்.

    எனது உடல்நிலை காரணமாகத்தான் இந்த முடிவை எடுத்தேன். எனக்கு கடுமையான மூட்டுவலி இருக்கிறது. முதுகிலும் பிரச்சினை இருக்கிறது. எனவே என்னால் சரியாக நடமாட முடியவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே இந்த பிரச்சினைகள் இருந்தது. இதனால் தான் நான் தேர்தல் பிரசாரத்திற்கு ஹெலிகாப்டரை பயன்படுத்தினேன்.

    உடல்நிலை இப்படி சீர்இல்லாமல் இருப்பதால் நான் தேர்தலில் போட்டியிட்டு பணியாற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வேன். கட்சிக்காக உழைப்பேன்.

    எனது தொகுதியில் நடந்துள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அதிருப்தியில் இருக்கிறேன். அங்கு முழுமையான வளர்ச்சியை கிடைத்திருக்கிறது என்று என்னால் கூறமுடியவில்லை.

    இவ்வாறு உமாபாரதி கூறினார். #tamilnews

    Next Story
    ×