search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் 27-ம் தேதி ரஷியா பயணம்
    X

    மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் 27-ம் தேதி ரஷியா பயணம்

    இந்தியா - ரஷியா இடயே தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய ஒப்பந்தங்களை செய்வதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் மூன்றுநாள் பயணமாக வரும் 27-ம் தேதி மாஸ்கோ நகருக்கு செல்கிறார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுடெல்லியில் இன்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, இந்தியா - ரஷியா இடயே தீவிரவாத ஒழிப்பு, திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, கள்ளநோட்டு நடமாட்டம், சைபர் குற்றத்தடுப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய பூர்வாங்க ஒப்பந்தங்களை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இவ்விவகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷியாவுக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டது. ஆனால், காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள விமானப் படை தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, அவரது பயண திட்டம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்தியா - ரஷியா இடையே அனைத்து வகையான தீவிரவாதங்களை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய ஒப்பந்தங்களை செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மூன்றுநாள் பயணமாக வரும் 27-ம் தேதி மாஸ்கோ நகருக்கு செல்கிறார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த உயரதிகாரிகள் குழுவும் உடன் செல்கிறது.

    இந்த பயணத்தின்போது ரஷிய உள்துறை மந்திரி விளாடிமிர் கோலோகோல்ட்ஸேவ் மற்றும் ரஷிய தலைவர்களை சந்திக்கும் ராஜ்நாத் சிங் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×