search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொடைக்கானலில் மு.க.ஸ்டாலின் ஓய்வு

    கொடைக்கானலில் ஓய்வெடுக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முக்கிய நிர்வாகிகள் மட்டும் இருந்தனர். வேறு யாரையும் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை. #MKStalin

    கொடைக்கானல்:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு கொடைக்கானல் வந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் அவர் தங்கி ஓய்வு எடுத்தார். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்ட அவர் கடந்த 1-ந்தேதி முதல் இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளிலும் இடைவிடாது தேர்தல் பிரசாரம் செய்தார்.

    கொடைக்கானலில் ஓய்வெடுக்கும் மு.க.ஸ்டாலினுடன் முக்கிய நிர்வாகிகள் மட்டும் இருந்தனர். வேறு யாரையும் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை. தொடர்ந்து மாலையில் அவர் திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரம் செய்வார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #MKStalin

    Next Story
    ×