search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    47-வது ஆண்டு விழா: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
    X

    47-வது ஆண்டு விழா: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

    அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா தலைமை கழகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி முதல்- அமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானோர் தலைமை கழகத்திற்கு வந்திருந்தனர்.

    தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் மாலை அணிவித்து வணங்கினார்கள்.


    பின்னர் ஜெயலலிதாவின் சிலையின் காலை தொட்டு கும்பிட்டனர். அதன் பிறகு கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்கள்.

    அதைத் தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்ட போது மரணம் அடைந்த 7 தொண்டர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.14 லட்சம் குடும்ப நல நிதியையும், சாலை விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கு தலா ரூ.50 வீதம் ஆயிரம் ரூ.1 லட்சம் நிதியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்கள்.

    இதே போல் சாலை விபத்தில் லேசான காயம் அடைந்து சிகிச்சை பெற்றவர்களுக்கு நிதிஉதவியாக ரூ.2லட்சத்து 90 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனிசாமியிடம் வழங்கினார்கள்.

    ஜெயலலிதாவால் கல்வி நிதி உதவி பெற்று திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவ-மாணவியர் 2 பேருக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.1லட்சத்து 50 ஆயிரம் நிதியை வழங்கினர்.

    ரத்த தானம் செய்வதற்காக அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் உருவாக்கப்பட்ட ரத்தத்தின் ரத்தமே என்ற செயலியும் தொடங்கி வைக்கப்பட்டது. நலிந்த கட்சி தொண்டர்களுக்கு நிதியும் வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், திருத்தணி ஹரி, பொன்னையன், தமிழ்மகன் உசேன், கோகுல இந்திரா, வளர்மதி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், சரோஜா, பாண்டியராஜன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சண்முகநாதன், விருகை ரவி, ஜே.சி.டி.பிரபாகரன், வாலாஜாபாத் கணேசன், ராஜேஷ், தி.நகர் சத்யா, மின்சாரம் சத்திய நாராயண மூர்த்தி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
    Next Story
    ×