search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    47வது ஆண்டு விழா: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு பழனிசாமி-ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை
    X

    47வது ஆண்டு விழா: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு பழனிசாமி-ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை

    அ.தி.மு.க.வை தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17-ந்தேதி அன்று 47-வது ஆண்டு தொடங்குவதை அடுத்து அன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கழக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17-ந்தேதி (புதன் கிழமை) அன்று 47-வது ஆண்டு தொடங்குகிறது.

    அன்று காலை 10 மணி அளவில், கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், சென்னை, ராயப்பேட்டை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளார்கள்.

    கழகப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி வழங்கப்படும்.

    கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வமும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் வழங்க உள்ளார்கள்.

    இந்த நிகழ்ச்சிகளில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்ட செயலாளர்களும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    Next Story
    ×