search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மீண்டும் டெல்லி சென்று போராட்டம் - அய்யாக்கண்ணு
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மீண்டும் டெல்லி சென்று போராட்டம் - அய்யாக்கண்ணு

    கர்நாடக தேர்தல் முடிந்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மீண்டும் டெல்லி சென்று போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார். #CauveryIssue #CauveryManagementBoard #Ayyakannu

    கோவை:

    தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

    தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கொண்டு விற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை தடை செய்ய கோரி மார்ச் 1- ந் தேதி முதல் 100 நாட்கள் விழிப்புணர்வு பிரசாரத்தை விவசாயிகள் மத்தியில் செய்து வருகிறோம்.

    குமரியில் இந்த பயணத்தை தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக வந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டு வருகிறோம். சென்னை கோட்டையில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் முடிகிறது. அப்போது முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துக்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் தெரிவித்து வருகிறோம்.

    இன்று கோவை மாவட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்களை கலெக்டரிடம் தெரிவித்து உள்ளோம்.

    கொங்கு மண்டல பகுதி வளம் பெற வேண்டுமானால் ஆனைமலை - நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். கோவை மண்டலத்தில் இந்த திட்டம் இல்லாததால் வருடத்திற்கு 100 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவில் வீணாக கலக்கிறது.

    எனவே இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    உயர் மின் அழுத்த கோபுரங்களை வேளாண் வயல் வழியாக கொண்டு சென்றால் விவசாய நிலம் பாழ்படும். எனவே பூமிக்கடியில் கேபிள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளோம்.

    கேரளாவில் உள்ள மருத்துவ கழிவுகளை கோவை மாவட்ட பகுதிகளில் கொட்டுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனை தடுக்க வேண்டும்.

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மக்களுக்கு கொடுத்தால் பொதுமக்களில் 50 சதவீதம் பேர் ஆண்மை இழக்கவும், பெண்கள் கருத்தரிக்கும் சக்தியை இழக்க செய்யும் வாய்ப்பு உள்ளது.

    எனவே இதனை தடை செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்துவது மத்திய அரசின் கடமை. இதனை காலம் கடத்தாமல் அமைக்க வேண்டும்.

    கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. தேர்தல் முடிந்த பிறகாவது பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார் என நம்புவோம்.

    இல்லை என்றால் டெல்லி சென்றுமீண்டும் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #CauveryIssue #CauveryManagementBoard #Ayyakannu

    Next Story
    ×