search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி பிரச்சினை"

    • குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.
    • தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரை.

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    89வது கூட்டத்திற்கு குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.

    காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த கூட்டத்தில், நவம்பர் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரை செய்யப்பட உள்ளது.

    மேலும், ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டதா என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • அரசியல் செய்வதற்காக கர்நாடக பா.ஜ.க. காவிரி பிரச்சினையை தூண்டி விடுகிறது.
    • மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டினார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி யின் 155-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தெற்குத்தெரு பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கிறாரோ அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். காவிரி பிரச்சினைக்கு முதல் கார ணம் பா.ஜ.க. குழந் தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி வருகின்றனர். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முதல் 15 நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் கொடுத்து வந்தார். ஆனால் போராட்டத்தை தூண்டியது பா.ஜனதா தான்.

    கர்நாடக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் தருவது அம்மாநில மக்களி டையே பெரும் வரவேற்பினை பெற்று உள்ளது. இதை திசை திருப்புவதற்காக பா.ஜனதா அரசியல் செய்கிறது. இங்குள்ள பா.ஜனதா இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்?. தற்போது டெல்லி சென்றுள்ள பா.ஜனதா தலைவர் அண்ணாமலை காவிரி பிரச்சினையில் கர்நாடக முன்னாள் முத லமைச்சர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் தலை யிடக்கூடாது என்று கட்சி மேலிடத்தில் கூறுவாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மா பட்டி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம், நகர் காங்கிரஸ் தலைவர் கரிசல்பட்டி சவுந்தரபாண்டி, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜா தேசிங், நகர்மன்ற கவுன்சிலர் அமுதா சரவணன், பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பி னர்கள் உலகநாதன், ராஜ்குமார், பழனிக்குமார், வட்டார தலைவர்கள் முரு கேசன், தளபதி சேகர், கள்ளிக்குடி பாண்டியன், வீரபத்திரன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கர்நாடகத்தில் மழை இல்லாதது தான் காவிரி பிரச்சினைக்கு காரணம்.
    • காங்கிரஸ் ஆட்சிக்கும் காவிரி பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை.

    சென்னை:

    கர்நாடக மாநில கைவினை பொருள்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவிரி-கர்நாடக மாநில கலை மற்றும் கைவினை பொருள்கள் விற்பனை மையம் தொடக்க விழா நடைபெற்றது.

    தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மற்றும் கர்நாடக அரசின் சிறு தொழில்கள், பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் சரணபசப்பா தர்ஷனபுர ஆகியோர் கலந்து கொண்டு புதிய கடையை தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து கர்நாடக அமைச்சர் சரணபசப்பா தர்ஷனபுர நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் மழை இல்லாதது தான் காவிரி பிரச்சினைக்கு காரணம்.

    இரண்டு மாநிலங்களும் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக கர்நாடகாவில் 19 மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    காங்கிரஸ் ஆட்சிக்கும் காவிரி பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை. கடந்த ஆண்டு மழை இருந்தது. தண்ணீர் பிரச்சினை இல்லை. இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மழை இல்லை. இது தான் பாதிப்புக்கு காரணம்.

    தண்ணீர் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை இரு மாநிலங்களும் அணுகி உள்ளோம். நீதி மன்ற உத்தரவை பின்பற்றுவோம்.

    காவிரி பிரச்சினை தொடர்பாக இரு மாநில அரசுகள் பேச வேண்டிய அவசியம் இல்லை.

    காவிரி பிரச்சினை குறித்து இரண்டு மாநிலங்களுடன் பேச வேண்டியதும், தீர்க்க வேண்டியதும் மத்திய அரசின் கடமை. அதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். அந்த பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×