search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில்வே தண்டவாளத்தில் நின்று போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண்கள் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக வந்தனர்.

    பின்னர் அவர்கள் ரெயில் நிலையம் முன்பு நின்று கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன், கருணாகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருக்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் நின்று கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 20 பெண்கள் உள்பட 105 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அதே பகுதியில் ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 
    Next Story
    ×