search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லாவரத்தில் மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம்
    X
    பல்லாவரத்தில் மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம்

    ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு- சென்னையில் 5 இடங்களில் மறியல்

    ராமராஜ்ய ரத யாத்திரையை கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.
    சென்னை:

    ராமராஜ்ய ரத யாத்திரையை கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

    கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வி.கோ.ஆதவன், செல்வம் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    ராயபுரம் மேம்பாலம் அருகே மாவட்ட செயலாளர் அன்புசெழியன், நிர்வாகி சவுந்தர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மறியல் செய்தனர். அவர்கள் ரோட்டில் படுத்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

    அண்ணாசாலையில் பெரியார் சிலை அருகே திராவிட கழகத்தினர் 30 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாரிமுனையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாநில செயலாளர் அமீர் அம்சா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் கரீம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    பல்லாவரம் போலீஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகே சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மறியல் செய்தனர்.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசன், மனித நேய மக்கள் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் சாஜகான் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். #Tamilnews
    Next Story
    ×