search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் 8-ந் தேதி நடக்கிறது
    X

    புதுவையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் 8-ந் தேதி நடக்கிறது

    புதுவையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் வருகிற 8-ந்தேதி மாலை 5 மணிக்கு கூடுகிறது. #CauveryIssue
    புதுச்சேரி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் டெல்லியில் காவிரி மேல் முறையீட்டு வழக்கும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள அம்சங்களை செயல்படுத்துவது குறித்த கூட்டம் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுவை மாநில தலைமை செயலாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு அழைப்பு அனுப்பி உள்ளது.


    இந்த நிலையில் தமிழகத்தை போல புதுவையிலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள், எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து அனைத்து கட்சி கூட்டத்தை புதுவை அரசு கூட்டுகிறது.

    வருகிற 8-ந் தேதி மாலை 5 மணிக்கு ஆனந்தா இன் ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது குறித்தும் முடிவு செய்யப்படும் என தெரிகிறது. #Tamilnews
    Next Story
    ×