search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகின் முதல் மொழியாய் தமிழை ஆக்க உறுதி ஏற்போம்- பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை
    X

    உலகின் முதல் மொழியாய் தமிழை ஆக்க உறுதி ஏற்போம்- பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை

    உலகின் முதல் மொழியாய் தமிழை ஆக்க உறுதி ஏற்போம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பூவுலகில் மனிதன் தோன்றி முதல் முறையாக வாய் திறந்து பேசிய மொழியாக விளங்குகிறது நம் தமிழ் மொழி. காலப்போக்கில் இன்று பல மொழிகள் உலகில் இருந்தாலும் அனைவருக்கும் தாய்மொழியாக முதுமொழியாக இருப்பது தமிழ் மொழி. இன்று உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படும் இவ்வேளையில் பூவுலகில் அனைவரின் தாய் மொழியாக விளங்கிய தமிழுக்கு தமிழ் அன்னைக்கு அத்தனை சிறப்பும் சேர முடியும்.

    தமிழனாய் தன்னைக் கருதும் அனைவரும் பிற மொழி கலப்படமில்லா தமிழை தன்மானத்தோடு பேசத் தொடங்குவோம். எனது தாய்மொழி தமிழ் அனைத்து மொழிக்கும் மூத்தவன் என்பதில் பெருமைக் கொள்வோம். 
    இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16-ந் தேதி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் அல்லாத மாணவர்கள் மத்தியில் ஆணித்தரமாக எடுத்துரைத்தது போல மூத்த மொழியான சமஸ்கிருதத்திற்கும் மூத்த முதல் வந்த மொழி என்று சிறப்பித்தமைக்கு இந்த தாய்மொழி தினத்தில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகின் முதல் மொழி தமிழ் என்றால் உலகின் முதல் இனம் தமிழினம். உலகின் முதல் இரண்டு இவையென்றால் உலகில் வாழும் அனைவரும் தமிழின் வழித்தோன்றல். உலகின் மொழிகள் யாவும் தமிழ்த்தாய் பெற்றெடுத்த செல்வங்கள். எனவே தாய்மொழி நாளான இன்று (21-ந் தேதி) எம்மொழியை பேச்சு மொழியாக கொண்டுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் உலகம் தமிழை கற்க வேண்டும் என்றும் இந்நாளில் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார். #tamilnews
    Next Story
    ×