search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் நீட் தேர்வை கண்டித்து கி.வீரமணி ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் நீட் தேர்வை கண்டித்து கி.வீரமணி ஆர்ப்பாட்டம்

    நீட் தேர்வில் மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு திராவிட கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    காவிரி பிரச்சினையில் தமிழக அரசு துரோகம் செய்வதை கண்டித்தும், நீட் தேர்வில் மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு திராவிட கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட கழக தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். தி.மு.க தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தி.க. தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி, மாநில மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குணசேகரன், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, தமிழர் தேசிய முன்னனி இயக்க பொதுச் செயலாளர் அய்யனாவரம் முருகேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முரளிதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாவட்ட செயலாளர் மனோகரன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி, இந்திய கம்யூனிஸ்ட்டு மாவட்ட செயலாளர் திருஞானம், ஆதிதமிழர் பேரவை மாவட்ட தலைவர் நாத்திகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் திராவிட கழக தலைவர் வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என்று கூறிவிட்டு அமைக்காமல் மறுத்து வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவில்லை. எடப்பாடி அரசு நிலை இல்லாமல் இருக்கிறது. எனவே அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் தலையை எண்ணகூடிய சூழ்நிலை உருவாகிறது. பஞ்சாப், அரியானாவில் தற்போது கலவரம் வெடித்து வருகிறது. இதற்கு பாரதீய ஜனதா அரசு மதவாதத்தை ஆதரிப்பதே காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×