search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்வம் தரும் செவ்வாய்க்கிழமை அண்ணாமலையார் வழிபாடு
    X

    செல்வம் தரும் செவ்வாய்க்கிழமை அண்ணாமலையார் வழிபாடு

    செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை நட்சத்திரம் தினத்தன்று அண்ணாமலையாரை வழிபட்டால் அனைத்து வகை செல்வங்களையும் பெற முடியும் என்று சொல்கிறார்கள்.
    நமது மூதாதையர்கள் கட்டிய ஆலயங்களில் இன்றும் அருள் அதிர்வலைகள் நிரம்பி இருப்பதை உணரலாம். கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் சக்தியை முழுமையாக பெறுவதற்கு ஏற்ப நமது பழமையான ஆலயங்கள் அமைந்துள்ளன.

    எனவே ஒரு ஆலயம் எந்த ராசி அல்லது எந்த நட்சத்திரத்தின் அம்சத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு வழிபட்டால் அதற்குரிய பலன்களை நிச்சயமாக பெற முடியும்.

    அந்த வகையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் கிருத்திகை நட்சத்திரத்தின் அம்சத்தில் அமைந்து இருப்பதாக கருதப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரத்துக்குரிய கிரகம் சூரியன் ஆவார்.

    சூரியனின் அதிதேவதை சிவபெருமான் ஆவார். எனவே கிருத்திகை நட்சத்திரம் தினத்தன்று அண்ணாமலையாரை வழிபட்டால் அனைத்து வகை செல்வங்களையும் பெற முடியும் என்று சொல்கிறார்கள். கிருத்திகை நட்சத்திரத்துக்குரிய தெய்வம் முருகன். ஜோதிட சாஸ்திரப்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம் ஆவார்.

    திருவண்ணாமலை ஆலயத்தில் அண்ணாமலையாருக்கு எந்த அளவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகிறதோ, அதே அளவுக்கு முருகப்பெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    இதைக் கருத்தில் கொண்டே திருவண்ணாமலை ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்வதை சிறப்பானதாக கருதுகிறார்கள். குறிப்பாக செவ்வாய்க்கிழமையன்று வழிபாடு செய்தால் அதிக பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக அதிக சக்தியுள்ள கிரகமாக செவ்வாய்க்கிரகம் உள்ளது. செவ்வாய் கிரகத்தின் அதிபதி நெருப்பு.
    திருவண்ணாமலை தலம் பஞ்ச பூதங்களில் நெருப்புக்கு உரிய தலம் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால்தான் நெருப்புக்குரிய அம்சமான செவ்வாய்க்கிழமையன்று திருவண்ணாமலை தலத்தில் வழிபடுவது சிறப்பைத் தரும் என்கிறார்கள்.

    ஜோதிடப்படி செவ்வாய் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துபவராக உள்ளார். ஆளுமைத் திறன், அதிகாரம், தைரியம், நம்பிக்கை, நாணயம், நேர்மை, வீரதீர செயல் புரிதல், தலைமைப் பொறுப்பு, உயர் பதவி ஆகியவை செவ்வாயின் அனுக்கிரகத்தால்தான் கிடைக்கும்.சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த செவ்வாய், சிவந்த மேனியை உடையவர். அது மட்டுமல்ல செவ்வாய்க்கு கிரக அந்தஸ்தை கொடுத்ததும் சிவபெருமான்தான்.

    இதனால் திருவண்ணாமலை தலத்தில் செவ்வாய் அம்சமும், அருளும் அதிகம் உள்ளது. எனவே திருவண்ணாமலை தலத்தில் செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்யும்போது நினைத்தது நிறைவேறும். ஜோதிட ரீதியாக செவ்வாய்க்கிழமையை குருட்டுத் தினம் என்பார்கள். செவ்வாய் ஓரையில் சுப காரியம் எதையும் செய்ய மாட்டார்கள்.

    ஆனால் திருவண்ணாமலை தலத்தில் செவ்வாய்க்கிழமை வழிபாடுகள் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் அணிவகுத்து வரும். சிவன் கோவில்கள் அனைத்திலும் பெரும்பாலும் திங்கட்கிழமை களில்தான் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். சோமவார பூஜையை வழிபடுவதை சிவபக்தர்கள் பலர் வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    ஆனால் திருவண்ணாமலை அக்னித் தலமாக இருப்பதால் திங்கட்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதில்லை. சோமவார பூஜை பஞ்ச பருவ விழாவில் சேர்க்கப்பட்டு விட்டதால், செவ்வாய்க்கிழமையில் தான் சிறப்பு பூஜைகளை மேற்கொள்கிறார்கள். திருவண்ணாமலை அக்னி தலம் என்பதால்தான் அருணாசலம் என்று அழைக்கப்படுகிறது. அருணம் என்றால் “சிவப்பு” என்று பொருள்.



    எனவே அக்னிக்குரிய ஆலயமாக திருவண்ணாமலை உள்ளது. அக்னிக்குரிய காரகன் செவ்வாய். இதனால் சிவாலயங்களில் திருவண்ணாமலையில் மட்டும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலையில் அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி உரிய ஆகம விதிகளை கடைபிடித்து வழிபட்டால் பிறவிப் பிணியில் இருந்து விடுபடலாம் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தானோ, என்னவோ திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை வழிபட்டு கிரிவலம் வந்தால் வண்டி, வண்டியாக நன்மைகள் வரும் என்று மகான் சேஷாத்திரி சுவாமிகளே கூறியுள்ளார். திருவண்ணாமலை செவ்வாய்க்கிழமை வழிபாட்டு சிறப்புக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

    அதுபோல நமது உடல் அமைப்பு ஆதாரத் தலங்களில் திருவண்ணாமலை மணிப்பூரகத் தலமாக திகழ்கிறது. “மணிப்பூரகம்” என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் அதற்கும் திருவண்ணாமலை ஆலயத்துக்கும் உள்ள அதிசய தொடர்பு உங்களுக்குத் தெரிய வரும்.

    மனித உடலில் 72 ஆயிரம் நாடிகள் இருக்கின்றன. இந்த 72 ஆயிரம் நாடிகளும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை, சகஸ்ரஹாரம் அல்லது துரியம் எனும் 7 சக்கரங்களில் இணைகின்றன. எனவே இந்த 7 சக்கரங்களும் நமது உடம்பில் எப்படி செயல்படுகிறதோ, அதற்கு ஏற்பதான் நமது உடலும், மனமும் இயங்கும்.

    நமது உடம்பில் தொப்புள் கொடிக்கு அருகில் மணிப்பூரகம் அமைந்துள்ளது. இதன் மூலக்கூறு நெருப்பாகும். அதாவது மணிப்பூரகம் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. திருவண்ணாமலை திருத்தலமும் அக்னி லிங்கமாக நெருப்பில் உருவாகி இருப்பதால் திருவண்ணாமலை தலத்தை மணிப்பூரகத் தலம் என்கிறார்கள்.

    மணிப்பூரகம் என்பது நமது வயிற்றையும் குறிக்கும். வயிற்றுக்குள்தான் இந்த உலகமே இயங்குகிறது. இது ஒட்டு மொத்த உலக இயக்கமும் அண்ணாமலையாருக்குள் அடக்கம் என்பதை பிரதிபலிப்பதாக சொல்கிறார்கள். மணிப்பூரகம் சக்கரம் உணர்ச்சிமயமானது என்று வரையறுத்துள்ளனர். மணிப்பூரகம் சக்கரம் சரியானபடி சுழலா விட்டால் அதிக உணர்ச்சி ஏற்படும். அதாவது மனதில் நிம்மதி இருக்காது. மனம் கொந்தளிப்புடன் காணப்படும்.

    சிலருக்கு மணிப்பூரகம் ஒழுங்கற்று இருந்தால் மனதில் ஆணவத்தையும், அகங்காரத்தையும் உருவாக்கி விடும். மகா விஷ்ணுவும், பிரம்மாவும் ஆணவத்தையும் அகங்காரத்தையும் கைவிட்டது இந்த தலத்தில்தானே. அதுபோல மணிப்பூரகம் சிறப்பாக&சரியாக சுழன்றால் நம்மிடம் உள்ள ஆணவமும், அகங்காரமும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். இதனால் நம் மனதில் நிம்மதி பிறக்கும்.

    மணிப்பூரகத்தில் தாமரை இதழ் போன்று 10 யோக நாடிகள் இருக்கின்றன. அவை சீராக இருந்தால் மனதில் சாந்தம் உண்டாகும்.திருவண்ணாமலை தலத்தில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்வதற்கு சில சூட்சமமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் அமர்ந்து தியானம் செய்து மணிப்பூரம் சக்கரத்தை மேம்படுத்தினால் மனதில் இனம்புரியாத அமைதி வந்து விடும். எந்தவித நோய்களும் உங்களை அணுகாது.

    “நமசிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரத்தில் ‘ம’ எனும் மந்திரத்தையும், தத்துவத்தையும் பிரதிபலிப்பதாக மணிப்பூரகம் சக்கரம் உள்ளது. இந்த சக்கரத்தை நாம் எந்த அளவுக்கு சுழல வைக்கிறோமோ, அந்த அளவுக்கு நமது வாழ்க்கையில் வசதிகள் பெருகும்.

    ஒருவரை நேர்மையான கடும் உழைப்பாளியாக மாற்றுவதே மணிப்பூரகம் சக்கரம்தான். எனவே திருவண்ணாமலை தலத்தில் உரிய முறையில் தியானம் செய்தால் இந்த பலனைப் பெற முடியும்.

    இப்படி இன்னும் பல சூட்சமங்களுடன் தொடர்புடையதாக திருவண்ணாமலை தலம் உள்ளது. இத்தலத்தில் உள்ள 142 சன்னதிகளும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புத் தன்மை வாய்ந்தவை. ஒவ்வொரு சன்னதியிலும் நின்று நிதானமாக வழிபட்டால், அதன் சிறப்பை நீங்கள் உணர முடியும். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் புகழ் பெற்ற திருவண்ணாமலையில் இதுவரை மூர்த்தி மற்றும் தலத்தின் சிறப்புகளை பார்த்து விட்டோம். அடுத்து தீர்த்தம்.

    திருவண்ணாமலையில் 360 தீர்த்தங்கள் உள்ளன. ஒவ்வொரு தீர்த்தத்துக்கும் ஒரு மகிமை
    Next Story
    ×