search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட தனுஷ் - அனிருத்
    X

    நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட தனுஷ் - அனிருத்

    கருத்து வேறுபாட்டால் நடிகர் தனுஷ் - இசையமைப்பாளர் அனிருத் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டுள்ளனர். #Dhanush #Anirudh
    நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களின் மகன் ஹர்ஷவர்தனா - ஸ்வேதா திருமணம் இன்று (11-02-2018, ஞாயிறுக்கிழமை) காலை சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல திருமண மண்டம் ஒன்றில் நடைபெற்றது. 

    இதில் இயக்குநர் பாண்டியராஜன், மௌலி, தம்பி ராமையா, ராதாரவி, வாணி ஜெயராம், விசு, பிரபு உள்ளிட்ட திரையுலக பிரலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் ரஜினிகாந்த் குடும்பத்தினர், ரவிச்சந்திரன் குடும்பத்தினர் உள்ளிட்ட ஒய்.ஜி.மகேந்திரனின் உறவுக்காரர்களும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 



    அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா ரஜினிகாந்த், அனிருத் என அவர்களது குடும்பத்தினர் அனைவரும் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டனர். 

    கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் - அனிருத் இருவரும் படங்களில் இணைந்து பணியாற்றவில்லை என்று பல கிசுகிசுகள் உலா வந்த நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Dhanush #Anirudh #YGmahendranSonMarriage

    Next Story
    ×