search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    `செம போத ஆகாதே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
    X

    `செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

    பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி வரும் `செம போத ஆகாதே' படக்குழுவில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
    அதர்வா தற்போது, `செம போத ஆகாதே', `ருக்குமணி வண்டி வருது', `இமைக்கா நொடிகள்', `ஒத்தைக்கு ஒத்த' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `செம போத ஆகாதே' படத்தை அதர்வாவின் அறிமுக படமான `பானா காத்தாடி' படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

    இதில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடிக்கின்றனர். இவர்களுடன் அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.



    யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு வருகிற நவம்பர் 22-ஆம் தேதி (நாளை) நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×