search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய்க்கு ஜோடியாகும் ராகுல் பிரீத் சிங்?
    X

    விஜய்க்கு ஜோடியாகும் ராகுல் பிரீத் சிங்?

    மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் ராகுல் பிரீத் சிங்.
    தமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையறதாக்க’ படங்களில் நடித்தவர் ராகுல் பிரீத் சிங். தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.

    தற்போது ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார்.

    அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருடைய ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். தொடர்ந்து ரஜத் இயக்கத்திலும் கார்த்தி நடிக்க இருக்கிறார். இதிலும் அவருடைய ஜோடி ராகுல் பிரீத் சிங்தான் நடிக்கிறார். இதன் மூலம் ‘ஸ்பைடர்’ படத்துக்கு பிறகு ராகுல் பிரீத்சிங்குக்கு 2 முக்கிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
    Next Story
    ×