என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அஜித் இட்லியோடு விவேகம் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்
Byமாலை மலர்23 Aug 2017 3:32 PM GMT (Updated: 23 Aug 2017 3:32 PM GMT)
நாளை வெளியாக இருக்கும் அஜித்தின் ‘விவேகம்’ படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். இதில் வட சென்னை ரசிகர்கள் வித்தியாசமான முறையில் 57 கிலோ இட்லி செய்து கொண்டாட இருக்கிறார்கள்.
வீரம், வேதாளம் படத்துக்குப் பிறகு, சிவா மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘விவேகம்’. இப்படம் நாளை வெளியாக இருப்பதையொட்டி தமிழ் நாட்டில் பல இடங்களில் அவரது ரசிகர்கள் பல விதங்களில் கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள்.
வடசென்னையில் உள்ள வீர சென்னை அஜித் நண்பர்கள் சார்பாக 57 கிலோ எடை கொண்ட இட்லியில் அவர் உருவம் பொறித்து அதை பாரத் திரையரங்க முகப்பில் வைக்க இருக்கிறார்கள். இது தொடர்பாக, இந்த இட்லியை செய்த இனியவன் கூறும்போது, ‘அஜித் ரசிகர்கள், விவேகம் படத்தை முன்னிட்டு வித்தியாசமாக இதை செய்யலாம் என்று கூறினார்கள். இதுவரை எந்த நடிகருக்கும் இதுமாதிரி இட்லி வடிவத்தில் அவர்களின் உருவத்தைப் பொறித்தது இல்லை. இதுதான் முதல் முறை.
பாரத் திரையரங்க முகப்பில் இந்த அஜித் இட்லியை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க உள்ளோம். அதுமட்டுமன்றி அஜித்தின் வீட்டுக்கும் எடுத்து செல்லலாம் என்ற எண்ணமும் உள்ளது. முதலில் அஜித் உருவம் போன்று ஒரு மாடல் வரைந்து அதற்கு மேல் இட்லி மாவை ஊற்றி இந்த இட்லியைச் செய்யவுள்ளோம். இட்லி வெந்த பிறகு, அதன் மேல் கைவேலைப்பாடுகளும் உண்டு. அஜித் இந்த இட்லியைப் பார்ப்பர் என்று நம்புகிறோம்'' என்று கூறினார்.
விவேகம் படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Next Story
×