என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சிம்பு, அதர்வா பாணியில் துல்கர் சல்மான்
Byமாலை மலர்1 Aug 2017 7:01 AM GMT (Updated: 1 Aug 2017 7:01 AM GMT)
தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்து வரும் நடிகர் துல்கர் சல்மான் அடுத்த படத்தில் சிம்பு, அதர்வா பாணியில் அவருக்கு நாயகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விக்ரம் ஜீவா நடிப்பில் தமிழ், மலையாளம் என இருமொழிகளில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகிய படம் `டேவிட்'. இந்த படத்தை மலையாளத்தின் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான பிஜோய் நம்பியார் இயக்கியிருந்தார். அந்த படத்திற்கு பின்னர் இந்தி மற்றும் மலையாளத்தில் ஒருசில படங்களை இயக்கிய பிஜோய் தற்போது துல்கர் சல்மானை வைத்து சோலோ படத்தை இயக்கியிருக்கிறார்.
துல்கர் நான்கு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நேஹா சர்மா, சாய் தன்ஷிகா, சுருதி ஹரிஹரன் மற்றும் ஆர்த்தி வெங்கடேஷ் உள்ளிட்ட 4 நாயகிகள் நடித்திருக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் நாயகன் துல்கர் சல்மான் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் சிம்புவின் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் 4 கதாநாயகிகளும், `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தில் அதர்வா ஜோடியாக 4 நாயகிகள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகிகளுடனான காதல் காட்சிகளில் ஜொலிப்பதில் பெயர் போன துல்கர் சல்மானுக்கு இப்படத்தில் நான்கு கதாநாயகிகள் என்ற அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.
இந்த படத்தை 'தி ரெபெக்ஸ் குரூப்' சார்பில் 'ரெபெக்ஸ் என்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் 'கேட்வே பிலிம்ஸ்' உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. 'சோலோ' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றது.
15 பாடல்கள் இடம்பெற்றிருக்கும் இப்படத்தில் 11 இசையமைப்பாளர்கள், மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மான் சிம்பு அதர்வா பிஜோய் நம்பியார் சோலோ அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் நேஹா சர்மா சாய் தன்ஷிகா சுருதி ஹரிஹரன் ஆர்த்தி வெங்கடேஷ் Dulquar Salman Simbu Andrea Bejoy Nambiar Solo Neha Sharma Sai Dhanshika Shrudhi Hariharan Aarti Venkatesh AAA Geminiganeshanum surulirajanum
Next Story
×