search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 73 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என தகவல்
    X

    இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 73 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என தகவல்

    இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு சுமார் 72.6 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. #MobileData



    இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 72.6 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    இதுவரை இல்லாத அளவு மிக குறைந்த விலையில் மொபைல் டேட்டா கிடைப்பதும், ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் வீடியோ ஆன் டிமாண்ட் சந்தை அதிக பலனடையும் என கூறப்படுகிறது. 

    இந்தியாவில் இணைய பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அசோகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் டேட்டா பயன்பாடு 10,96,85,793 மில்லியன் எம்.பி.யாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 2017 இல் டேட்டா பயன்பாட்டு அளவு 71,67,103 மில்லியன் எம்.பி.யாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



    2013 ஆம் ஆண்டு வரை இந்தியர்கள் மொபைல் டேட்டாவை தவிர வாய்ஸ் சேவைகளையே அதிகம் பயன்படுத்தி வந்தனர். தற்சமயம் பெரும்பாலான மொபைல் கட்டணங்களில் டேட்டா பயன்பாடு ஆதிக்கம் செலுத்துகிறது. மொபைல் டேட்டா பயன்பாட்டில் 65 முதல் 75 சதவிகிதம் வீடியோ ஸ்டிரீமிங் செய்யப்படுவதாக நோக்கியா மொபைல் பிராண்ட்பேண்ட் இன்டெக்ஸ் 2018 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2022 ஆம் ஆண்டு மொபைல் இண்டர்நெட் பயன்பாடு 56.7 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017 இல் இந்த வளர்ச்சி 30.2 சதவிகிதமாக இருந்தது. 
    Next Story
    ×