search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹால்மார்க்"

    • ஹால்மார்க் என்ற பொறுப்பை இந்திய தர நிர்ணய கழகத்திடம் இந்திய அரசு பொறுப்பை ஒப்படைத்துள்ளது.
    • ஹால்மார்க் முத்திரை இடுவதற்கு ஐந்து பிரிவுகளை இந்திய தர நிர்ணய கழகம் நிர்ணயித்துள்ளது.

    ஹால்மார்க் என்பது விலையுயர்ந்த உலோகப் பொருட்களில், அந்த விலையுயர்ந்த உலோகப் பொருள் சேர்ந்துள்ள அளவின் துல்லிய மதிப்பு மற்றும் அங்கீகார பதிவாகும்.

    தங்கத்தில் கலப்படம் செய்யாமல் விற்க வேண்டும் என்பதற்காக சுமார் 800 வருடங்களுக்கு முன் பிரிட்டனில் தான் முதல் முதலாக ஹால்மார்க் அறிமுகம் செய்யப்பட்டது. அன்றைய நகை வியாபாரிகள் சில உலோகங்களை தங்கத்துடன் எந்த அளவு சேர்கிறார்கள்? என்பதை எல்லோருக்கும் தெரியும்படி ஒரு ஹாலில் வைத்து நகை செய்தனர். ஹாலில் வைத்து தங்க நகைகளை செய்து அதன்பின் வியாபாரம் செய்வதால் தான் ஹால்மார்க் என்ற பெயர் இதற்கு வந்தது.

    இந்தியாவில், ஹால்மார்க் என்ற பொறுப்பை இந்திய தர நிர்ணய கழகத்திடம் இந்திய அரசு பொறுப்பை ஒப்படைத்துள்ளது. நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ள இந்த கழகத்தின் அலுவலகம் தான் ஹால்மார்க் என்ற சோதனையை செய்கிறது.

    ஹால்மார்க் முத்திரை இடுவதற்கு ஐந்து பிரிவுகளை இந்திய தர நிர்ணய கழகம் நிர்ணயித்துள்ளது.

    1. பிஐஎஸ் தர நிர்ணய கழகத்தின் சின்னம்.

    2. தங்கத்தின் தன்மை அல்லது மாற்று. உதாரணமாக 22 காரட் தங்கத்தில் 916 முத்திரையும், 21 காரட் தங்கத்தில் 875 என்ற முத்திரையும் இடப்பட்டிருக்கும்.

    3. ஹால்மார்க் செய்யப்படும் மையத்தின் சின்னம்.

    4. நகைகள் செய்யப்பட்ட வருடம் ரகசியமாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

    5. பிஐஎஸ் அங்கீகாரம் வணிகரின் சின்னம்.

    ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் மேற்கண்ட ஐந்து முத்திரைகளும் கண்டிப்பாக இருக்கும்.

    சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ என்ற தங்க நகை ஏற்றுமதி செய்யும் 164 உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால் இந்திய அரசு பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற விதியும் உள்ளது.

    -அருண் நாகலிங்கம்

    • பிஐஎஸ் ஹால்மார்க் நகைகளை மட்டுமே பொதுமக்கள் வாங்க வேண்டும்.
    • மதுரை ஸ்ரீபாலகோபாலன் ஜுவல்லரி உரிமையாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை ஸ்ரீபால கோபாலன் ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.டி.செந்தில்குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய அரசு கடந்த 1-ந் தேதி முதல் தங்க நகைகளுக்கு பிஐஎஸ் ஹால் மார்க் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து ள்ளது. இனிமேல் பிஐஎஸ் தர குறியீடு கொண்ட தங்கம் மட்டுமே விற்கவும், வாங்கவும் வேண்டும்.

    ஹால் மார்க் முத்திரை என்பது 3 குறியீடுகளை கொண்டது. பிஐஎஸ் குறியீடு, தரம் மற்றும் எண் ஆகியவை இடம் பெற்று இருக்கும். எந்த தங்க நகையும் முழுமையான தங்கம் கிடையாது. கண்டிப்பாக இதர உலோகங்கள் சேர்க்கப் படும்.

    அதன் மூலம் தான் நமக்கு தேவையான தங்க நகைகளை வடிவமைக்க முடியும். எனவே தங்கத்துடன் சேர்க்கப்படும் உலோகங்களின் அளவை பொறுத்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படும்.

    ஹால் மார்க் முத்திரை 3 சதவீதமாக பிரிக்கப்ப டுகிறது. 22 கே 916 என்றால் 22 காரட் தங்கம். இதில் 91.6 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும். 18கே750 என்றால் 18 காரட் தங்கம். இதில் 75 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும். 14கே858 என்றால் 14 காரட் தங்கம். இதில் 58.5 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும்.

    உண்மையான ஹால்மா ர்க் முத்திரை பதித்த நகைகளை வாங்கும் போது அதற்கான நன்மை களும் நமக்கு கிடைக்கும். வங்கியில் தங்க நகை கடன் வாங்க, நகைகளை மீண்டும் விற்பனை செய்வதற்கு ஹால்மார்க் முத்திரை அவசியமாக உள்ளது.

    எனவே பொதுமக்கள் சிறிது சிறிதாக சேமித்து வாங்கும் தங்க நகைகளில் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை உள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்க நகைகளில் ஹால்மார்க் என்பது ஒரு தரத்திற்கான அடையாளம்.
    • ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மையை நுகர்வோர் சரிபார்க்கலாம்.

    சென்னை :

    பல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை எனத்தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

    இவ்வாறான முறைகேடுகளைத்தடுக்க ஏப்ரல் 1-ந் தேதி (நாளை) முதல் தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்.) சென்னை பிரிவுத்தலைவர் பவானி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய தர நிர்ணய அமைவனம் என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவினியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.

    இது பொருட்களுக்கான தர உரிமம் (ஐ.எஸ்.ஐ. முத்திரை), மேலாண்மை திட்டச்சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கலைப் பொருட்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வக சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக்கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது

    ஹால்மார்க்கிங் திட்டத்தின் நோக்கம், கலப்படத்திற்கு எதிராக பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் உற்பத்தியாளர்கள் சட்டப்பூர்வமான தரத்தை பேணுவதைக் கட்டாயப்படுத்துவது ஆகும். தங்க நகைகளில் ஹால்மார்க் என்பது ஒரு தரத்திற்கான அடையாளம்.

    இந்தியாவில் முதற்கட்டமாக 288 மாவட்டங்களில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    தங்க நகைகளில் ஹால்மார்க்கிங் என்பது பி.ஐ.எஸ். (இந்திய தர நிர்ணய அமைவனம்), தங்கத்தின் தூய்மை, நேர்த்தி மற்றும் 6 இலக்க தனித்த அடையாள எண் ஆகிய 3 அடையாளங்களைக்கொண்டுள்ளது.

    BIS CARE எனப்படும் செயலியில் உள்ள VERIFY HUID என்ற ஐகானை கிளிக் செய்வதன் மூலம், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மையை நுகர்வோர் சரிபார்க்கலாம்.

    வாடிக்கையாளர்கள் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை அங்கீகாரம் பெற்ற மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் மையங்களில் ரூ.200 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்துகொள்ளலாம்.

    ஏப்ரல் 1-ந் தேதி (நாளை) முதல் நகைக்கடைகளில் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே விற்கவேண்டும்.

    ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்றால் அதன் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஹால்மார்க் எண் பொறிக்கப்படாத தங்க நகைகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது.
    • நாடு முழுவதும் 940 ஹால்மார்க் முத்திரை அளிக்கும் மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

    புதுடெல்லி:

    தங்க நகைகள் மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உறுதி செய்ய, ஹால்மார்க் முத்திரை அளிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது. ஹால்மார்க் முத்திரை பெற, தனித்துவமிக்க ஆறு இலக்க எண் ஒன்று ஒவ்வொரு நகை மீதும் பொறிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த நகையை உருவாக்கிய நிறுவனம் மற்றும் ஹார்ல்மார்க் முத்திரை அளித்த மையம் எது என்பதை எளிதாக கண்டறிய முடியும்.

    நாடு முழுவதும் 940 ஹால்மார்க் முத்திரை அளிக்கும் மையங்கள் உருவாக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன. சிறு, குறு நகை நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதற்கு ஆகும் கட்டணத்தில் 80 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் 90 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.

    இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் ஹால்மார்க் நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், மார்ச் 31-க்குப் பின் ஹால்மார்க் அடையாளம் இல்லாத நகையை விற்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்படுவதன் மூலம் தங்க நகை வாங்குபவர்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்பட்டு, நாடு முழுவதும் தங்க நகைகளின் தரத்தை ஒரே அளவில் இருக்கச் செய்யமுடியும்.

    ×