search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hallmark"

    • பிஐஎஸ் ஹால்மார்க் நகைகளை மட்டுமே பொதுமக்கள் வாங்க வேண்டும்.
    • மதுரை ஸ்ரீபாலகோபாலன் ஜுவல்லரி உரிமையாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை ஸ்ரீபால கோபாலன் ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.டி.செந்தில்குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய அரசு கடந்த 1-ந் தேதி முதல் தங்க நகைகளுக்கு பிஐஎஸ் ஹால் மார்க் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து ள்ளது. இனிமேல் பிஐஎஸ் தர குறியீடு கொண்ட தங்கம் மட்டுமே விற்கவும், வாங்கவும் வேண்டும்.

    ஹால் மார்க் முத்திரை என்பது 3 குறியீடுகளை கொண்டது. பிஐஎஸ் குறியீடு, தரம் மற்றும் எண் ஆகியவை இடம் பெற்று இருக்கும். எந்த தங்க நகையும் முழுமையான தங்கம் கிடையாது. கண்டிப்பாக இதர உலோகங்கள் சேர்க்கப் படும்.

    அதன் மூலம் தான் நமக்கு தேவையான தங்க நகைகளை வடிவமைக்க முடியும். எனவே தங்கத்துடன் சேர்க்கப்படும் உலோகங்களின் அளவை பொறுத்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படும்.

    ஹால் மார்க் முத்திரை 3 சதவீதமாக பிரிக்கப்ப டுகிறது. 22 கே 916 என்றால் 22 காரட் தங்கம். இதில் 91.6 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும். 18கே750 என்றால் 18 காரட் தங்கம். இதில் 75 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும். 14கே858 என்றால் 14 காரட் தங்கம். இதில் 58.5 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும்.

    உண்மையான ஹால்மா ர்க் முத்திரை பதித்த நகைகளை வாங்கும் போது அதற்கான நன்மை களும் நமக்கு கிடைக்கும். வங்கியில் தங்க நகை கடன் வாங்க, நகைகளை மீண்டும் விற்பனை செய்வதற்கு ஹால்மார்க் முத்திரை அவசியமாக உள்ளது.

    எனவே பொதுமக்கள் சிறிது சிறிதாக சேமித்து வாங்கும் தங்க நகைகளில் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை உள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்க நகைகளில் ஹால்மார்க் என்பது ஒரு தரத்திற்கான அடையாளம்.
    • ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மையை நுகர்வோர் சரிபார்க்கலாம்.

    சென்னை :

    பல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை எனத்தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

    இவ்வாறான முறைகேடுகளைத்தடுக்க ஏப்ரல் 1-ந் தேதி (நாளை) முதல் தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்.) சென்னை பிரிவுத்தலைவர் பவானி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய தர நிர்ணய அமைவனம் என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவினியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.

    இது பொருட்களுக்கான தர உரிமம் (ஐ.எஸ்.ஐ. முத்திரை), மேலாண்மை திட்டச்சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கலைப் பொருட்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வக சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக்கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது

    ஹால்மார்க்கிங் திட்டத்தின் நோக்கம், கலப்படத்திற்கு எதிராக பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் உற்பத்தியாளர்கள் சட்டப்பூர்வமான தரத்தை பேணுவதைக் கட்டாயப்படுத்துவது ஆகும். தங்க நகைகளில் ஹால்மார்க் என்பது ஒரு தரத்திற்கான அடையாளம்.

    இந்தியாவில் முதற்கட்டமாக 288 மாவட்டங்களில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    தங்க நகைகளில் ஹால்மார்க்கிங் என்பது பி.ஐ.எஸ். (இந்திய தர நிர்ணய அமைவனம்), தங்கத்தின் தூய்மை, நேர்த்தி மற்றும் 6 இலக்க தனித்த அடையாள எண் ஆகிய 3 அடையாளங்களைக்கொண்டுள்ளது.

    BIS CARE எனப்படும் செயலியில் உள்ள VERIFY HUID என்ற ஐகானை கிளிக் செய்வதன் மூலம், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மையை நுகர்வோர் சரிபார்க்கலாம்.

    வாடிக்கையாளர்கள் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை அங்கீகாரம் பெற்ற மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் மையங்களில் ரூ.200 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்துகொள்ளலாம்.

    ஏப்ரல் 1-ந் தேதி (நாளை) முதல் நகைக்கடைகளில் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே விற்கவேண்டும்.

    ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்றால் அதன் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 6 இலக்க தனித்துவ அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
    • நான்கு இலக்க ஹால்மார்க் தங்க நகைகளை ஏப்ரல் முதல் விற்க முடியாது.

    திருப்பூர் :

    வரும் ஏப்ரல் முதல் விற்பனை செய்யும் தங்க ஆபரணங்களில் முக்கோ ண வடிவிலான ஹால்மார்க் முத்திரையுடன், 6 இலக்க தனித்துவ அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும்என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவை இல்லாத தங்க ஆபர ணங்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறி வித்துள்ளது.தங்கத்தின் தூய்மைக்கான சான்றிதழாக ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது.

    ஹால் மார்க்கின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக தனித்துவ அடையாள எண் வழங்க ப்படுகிறது.இதில் 3 இலக்கங்கள் ஆங்கில எழுத்துக்களாலும், 3 இலக்கங்கள் எண் வடி விலும் இருக்கும். இந்த அடையாள எண் முன்பு நான்கு இலக்கங்களில் வழங்கப்பட்டது. ஏப்ரல் முதல் 6 இலக்க அடையாள எண் கட்டா யமாக்கப்பட்டு ள்ளது. பழைய நான்கு இலக்க ஹால்மார்க் தங்க நகைகளை ஏப்ரல் முதல் விற்க முடியாது.இது குறித்து தர நிர்ணயத்தினர் கூறுகையில், வரும் ஏப்ரல் முதல் தங்க ஆபரணங்களில் 6 இலக்கங்களை கொண்ட தனித்துவ அடையாள எண் இருக்க வேண்டும். அப்படி இல்லாத நகைகள் பறிமுதல் செய்யப்படும்.சம்மந்த ப்பட்ட ஹால்மார்க்கிங் மையத்தின் மீதும், விற்ப னையாளர்கள் மீதும் நட வடிக்கை மேற்கொள்ள ப்படும்.

    பழைய நடைமுறை யில் ஹால்மார்க் முத்திரை மற்றும் 4 இலக்க எண்ணு டன் கூடிய தங்க ஆபரண ங்கள் விற்பனை யை முடிக்க கால அவகாசம் மார்ச் 31-ந் தேதி நிறை வடைகி றது என்றனர். நகை வியாபாரிகள் கூறுகையில், பழைய ஹால் மார்க் முத்திரை நகைகளை விற்பனை செய்ய ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். அதே சமயம் பழைய ஹால்மார்க் பதித்து விற்பனை செய்த நகை களின் தரத்துக்கு மக்களிடம் என்ன சொல்லப்போ கிறார்கள் என்பதை அறிவிக்க வேண்டும் என்றார். 

    ×