search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டீவ் ஸ்மித்"

    • இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், லபுசேன் ஆகியோர் சதமடித்தனர்.
    • இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    கல்லே:

    ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 37 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய லபுசேன், ஸ்மித் ஜோடி பொறுப்புடன் ஆடியது. லபுசேன் சிறப்பாக ஆடி சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 12 ரன்னிலும், கேமரூன் கிரீன் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.

    3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லபுசேன், ஸ்மித் ஜோடி 134 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து அபாரமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித்தும் சதமடித்து அசத்தினார்.

    முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 109 ரன்னுக்டன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்ய 3 விக்கெட்டும், ரஜிதா, மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவது சந்தேகம்.
    • டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் மிகவும் முக்கியமானதாகும்.

    ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணியும் ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் ஜூன் 29-ம் தேதி தொடங்குகிறது.

    ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் தொடரில் மீண்டும் இணைகிறார். வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் டி20 தொடரின் போது விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.

    உடல் தகுதியை இன்னும் நிரூப்பிக்காததால் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவது சந்தேகம். இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் மிகவும் முக்கியமானதாகும்.

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி விளையாட தடைவிதிக்கப்பட்டதை அடுத்து குளோபல் டி20 கனடா லீக்கில் விளையாடிய ஸ்மித் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
    குளோபல் டி20 கனடா லீக் கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். 6 அணிகள் மோதும் இதில் பங்கேற்கும் டொராண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால தடைபெற்ற ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் இடம்பிடித்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற குளோபல் டி20 கனடா போட்டியில் களம் இறங்கினார். 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 61 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ஸ்மித்திற்கு ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றது. ஸ்மித்துடன் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய டேவிட் வார்னரும் இந்த லீக்கில் விளையாடி வருகிறார்.


    ஸ்மித் இந்த லீக் போட்டியில் கிடைக்கும் வருமானத்தை அடிமட்டத்தில் இருந்து கிரிக்கெட்டை வளர்க்கும் திட்டத்திற்கு (grassroots cricket programs) வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பேசிய கிறிஸ் கெய்ல், 'ஸ்மித் மற்றும் வார்னர் செய்த குற்றங்களுக்கு அவர்கள் தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்கள் மற்ற கிரிக்கெட் வீரர்களை போன்று மகிழ்ச்சியாக வாழ உரிமை உள்ளது. தங்கள் குடும்பத்திற்காக அவர்கள் உழைக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கான இடத்தை வழக்க வேண்டும். மனிதர்கள் தவறு செய்வது வழக்கம். அதனை திருத்திக் கொள்ள அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க வேண்டும்' என கூறினார்.

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய பின் தொடர்ந்து நான்கு நாள்கள் அழுததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார். #SteveSmith #BallTamperingScandal
    சிட்னி:

    தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் வான்கிராப்ட் ஆகிய மூவருக்கு விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. மேலும், அவர்கள் சமுதாய சேவை செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டது. சர்வதேச போட்டியில் விளையாட தடை இருந்தாலும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஸ்மித் சிட்னி பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். ஆண்களின் மன ஆரோக்கியத்திற்காக நிதிதிரட்டுவதை மேம்படுத்தும் வகையில் இந்த விழா நடைபெற்றது. அப்போது பேசிய அவர், 'உண்மையை கூற வேண்டும் என்றால் நான் நான்கு நாட்களாக கண்ணீரில் என் நாட்களை கழித்தேன். ஒரு ஆணாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது தவறல்ல.


    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது என் மனதை பெரிதும் பாதித்தது. இதுவரை என் வாழ்நாளில் இது போன்ற கடினமான சூழ்நிலையில் நான் இருந்ததில்லை. இரண்டு மாதங்கள் முடிந்துள்ளன. இந்த நாட்கள் நான் மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும். நான் விரைவில் சிறப்பாக விளையாடி மீண்டும் உயரத்தை தொடுவேன்' என கூறினார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக திகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித் பிரச்சனையில் சிக்கிய பின் நடைபெற்ற  செய்தியாளர்கள் சந்திப்பில் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது. #SteveSmith #BallTamperingScandal



    ×