என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான்கு நாட்கள் தொடர்ச்சியாக அழுதேன் - கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேட்டி
Byமாலை மலர்5 Jun 2018 9:10 AM GMT (Updated: 5 Jun 2018 9:10 AM GMT)
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய பின் தொடர்ந்து நான்கு நாள்கள் அழுததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார். #SteveSmith #BallTamperingScandal
சிட்னி:
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் வான்கிராப்ட் ஆகிய மூவருக்கு விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. மேலும், அவர்கள் சமுதாய சேவை செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டது. சர்வதேச போட்டியில் விளையாட தடை இருந்தாலும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஸ்மித் சிட்னி பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். ஆண்களின் மன ஆரோக்கியத்திற்காக நிதிதிரட்டுவதை மேம்படுத்தும் வகையில் இந்த விழா நடைபெற்றது. அப்போது பேசிய அவர், 'உண்மையை கூற வேண்டும் என்றால் நான் நான்கு நாட்களாக கண்ணீரில் என் நாட்களை கழித்தேன். ஒரு ஆணாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது தவறல்ல.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது என் மனதை பெரிதும் பாதித்தது. இதுவரை என் வாழ்நாளில் இது போன்ற கடினமான சூழ்நிலையில் நான் இருந்ததில்லை. இரண்டு மாதங்கள் முடிந்துள்ளன. இந்த நாட்கள் நான் மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும். நான் விரைவில் சிறப்பாக விளையாடி மீண்டும் உயரத்தை தொடுவேன்' என கூறினார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக திகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித் பிரச்சனையில் சிக்கிய பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது. #SteveSmith #BallTamperingScandal

Next Story
×