search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலம்மாள் பாட்டி"

    • நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார்.
    • அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக் கழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக வேலம்மாள் பாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
    • வேலம்மாள் பாட்டி உடலுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் புத்தேரி அருகே கீழகலுங்கடி பகுதியை சேர்ந்தவர் வேலம்மாள் (வயது 92). இவர் தமிழக அரசு கொரோனா ஊரடங்கின்போது வழங்கிய ரூ.2000 பணம் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கியபோது தனது பொக்கை வாய் சிரிப்பால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதன் மூலமாக வேலம்மாள் பாட்டி பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் குமரி மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தபோது அவரை சந்தித்து தனக்கு வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று அஞ்சுகிராமம் அருகே பால்குளம் பகுதியில் அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இருப்பினும் பாட்டி அங்கு செல்லாமல் கீழக்கலுங்கடி பகுதியில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக வேலம்மாள் பாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். அவரது உடலுக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    • அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்குவதற்கு ரூ.76 ஆயிரத்தை குடிசை மாற்று வாரியத்திற்கு வழங்க வேண்டும்.
    • வேலம்மாள் பாட்டிக்காக அந்த தொகையை தோவாளை ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பூதலிங்கம் செலுத்தி உள்ளார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை சேர்ந்தவர் வேலம்மாள் பாட்டி. இவர் தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்களை கையில் வைத்துக் கொண்டு பொக்கை வாய் சிரிப்புடன் இருந்த படம் மூலம் பிரபலமானார்.

    இந்தப் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிரிப்பு என கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி நாகர்கோவில் வந்த அவர், வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார்.

    அப்போது தனக்கு இலவச வீடும், முதியோர் ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என வேலம்மாள் பாட்டி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து வேலம்மாள் பாட்டிக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் வீடு கோரிக்கை நிலுவையில் இருந்தது. இது தொடர்பாக மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அஞ்சுகிராமம் பால்குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வேலம்மாள் பாட்டிக்கு இலவச வீடு ஒதுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் நேற்று இரவு வேலம்மாள் பாட்டிக்கு இலவச வீட்டிற்கான உத்தரவை வழங்கினார்.

    அதனை பெற்றுக்கொண்ட வேலம்மாள் பாட்டி, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். எனக்கு இலவச வீடு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி. ஏழைகளின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன் என்றார்.

    அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்குவதற்கு ரூ.76 ஆயிரத்தை குடிசை மாற்று வாரியத்திற்கு வழங்க வேண்டும். வேலம்மாள் பாட்டிக்காக அந்த தொகையை தோவாளை ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பூதலிங்கம் செலுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து தான் வேலம்மாள் பாட்டிக்கு இலவச வீடு வழங்கப்பட்டுள்ளது.

    இலவச வீடு பெற்ற வேலம்மாள் பாட்டியை, நாகர்கோவில் மேயர் மகேஷ் இன்று நேரில் அழைத்து கவுரவித்தார்.

    ×