search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதைப்பண்ணைகளில்"

    • விதைப்பண்ணைகள் தற்போது பூப்பருவம் முதல் அறுவடை நிலை வரை உள்ளது.
    • அறுவடை தொழில் நுட்ப ங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களை ேசர்ந்த தனியார், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் விதைப் பண்ணைகள் அமைத்துள்ளனர்.

    இவ்விதைப் பண்ணை களை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் ஆய்வு செய்தார். மேலும் விதைச்சான்று உதவி இயக்குநர் தெரிவித்ததாவது:-

    விதை உற்பத்தியாளர்கள் இப்பகுதியில் நெல் ஏடிடி 37, ஏஎஸ்டி 16, டிபிஎஸ் 5, எம்டியு 1010, என்எல்ஆர் 34449 ஆகிய ரகங்களின் வல்லுநர் மற்றும் ஆதாரநிலை ஒன்று விதைகளை கொண்டு விதைப்பண்ணைகளை அமைத்துள்ளனர்.

    இவ்விதைப்பண்ணைகள் தற்போது பூப்பருவம் முதல் அறுவடை நிலை வரை உள்ளது. இவ்விதைப் பண்ணை களின் வயல் தரம் ஆய்வு செய்யப்பட்டு சாகுபடி யாளர்களுக்கு பயிர் பாதுகாப்பு மற்றும் அறுவடை தொழில் நுட்ப ங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தால் தற்போது புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட புதிய நெல் ரகங்களான ஏஎஸ்டி 21, கோ 54, கோ 55 மற்றும் ஏடிடி 57 ரகங்களின் உண்மைநிலை மாதிரி விதைப்பண்ணை களும் ஆய்வு செய்யப்பட்டு ஈரோடு மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் கோபிசெட்டி பாளையம் உதவி விதை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் நெல் ஏஎஸ்டி16, டிபிஎஸ் 5, எம்டியு1010, ஏடி37, கோ51, ஜோதி ஆகிய ரகங்கள் பயிரிடப்பட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விதைப்பண்ணை பயிரானது தற்போது பூப்பருவம் மற்றும் அறுவடை பருவத்தில் உள்ளது.

    இவ்விதைப்பண்ணைகளை ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் எஸ்.மோகனசுந்தரம் ஆய்வு மேற்கொண்டு விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்களுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி அளித்தார்.

    இப்பயிற்சியின்போது விதைப்பயிர் நடவுமுறை, கலவன்கள் அகற்றும் முறை, பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் பற்றி கூறினார்.

    மேலும் இந்த பருவத்தில் நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்தும் பயிர்பாதுகாப்பு முறைகளை பற்றி கூறினார்.

    இப்பயிற்சியின்போது ஈரோடு மாவட்ட விதைச் சான்று அலுவலர்கள், தனியார் விதை உற்பத்தியாளர்கள் மற்றும் டி.என்.பாளையம் வட்டார உதவி விதை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×