search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைப்படகுகள்"

    • பலத்த காற்று எதிரொலி
    • குளச்சலில் இன்று மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    மன்னார் வளைகுடா, பாண்டிச்சேரி மற்றும் தமிழக கடல் பகுதியில் 40 முதல் 50 கி.மீ.வேகம் வரை காற்று வீசக்கூடும், 8-ந் தேதி குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் 70 கி.மீ. வரை அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் குறிப்பிட்ட நாட்களில் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் இன்று மீண்டும் கடலுக்கு செல்ல வில்லை. அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்ப ட்டு உள்ளன.

    இன்று கரை திரும்பிய விசைப்படகுகளில் சிறிய இறால் எனப்படும் புல்லன் மற்றும் கிளி மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர்.

    காற்று எச்சரிக்கை காரண மாக பைபர் வள்ளங்கள், கட்டு மரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.இவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில வள்ளங்களே மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.இதனால் குளச்சலில் இன்று மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    • மதுரை-ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
    • ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மதுரை

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்ற ழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் அடுத்து 4 தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டகளில் கன மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் சில இடங்களில் லேசான தூரல் மழை பெய்தது. இன்று மதுரையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டி ருந்தது. இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி-கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.

    இன்று காலை முதல் மதுரை நகர் மற்றும்புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டன. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

    சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தர விட்டார்.

    சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று காலை வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ராஜ பாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. பிற்பகலுக்கு பின் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடலோர பகுதிகளான ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதி களில் கடல் காற்று அதிகமாக இருந்தது. இதனால் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    அவ்வப்போது கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக 3-வது நாளாக இன்றும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீன வர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    • நேற்று காலை முதல் மேற்கு கடற்கரை பகுதி விசைப்படகினர் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்
    • 75 படகுகள் கரை திரும்பி குளச்சல் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட் டுள்ளது

    கன்னியாகுமரி :

    மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகள் மீன் பிடிக்க மத்தியரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது.

    இந்த தடைக்காலம் குமரி மாவட்டத்தில் 2 பருவ காலமாக உள்ளது. கன்னியாகுமரி சின்னமுட்டம் கடல் பகுதிகள் கிழக்கு கடற்கரையில் உள்ளதால் அங்கு கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் வரை தடைக்காலம் அமலில் இருந்தது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்கள் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

    இந்த கடற்கரையில் கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி (நேற்று முன்தினம்) நள்ளிரவு வரை தடைக்காலம் அமலில் இருந்தது. இதையடுத்து நேற்று காலை முதல் மேற்கு கடற்கரை பகுதி விசைப்படகினர் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதற்காக விசைப்படகினர் கடந்த சில நாட்களாக தயாராகி வந்தனர்.

    இந்நிலையில் கடலில் நேற்று முதல் 3 ம் தேதிவரை மணிக்கு 50 கி.மீ.வேகம்வரை சூறைக்காற்று வீசும் என மீன்துறை மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இந்த தகவல் வருவதற்கு முன்பே விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று விட்டன.மீன் பிடிப்பதற்கு சென்ற படகுகள் கடலில் வீசிய காற்றில் தொடர்ந்து படகை செலுத்த முடியாததால் அவை பாதியிலேயே கரை திரும்பின. நேற்று இரவு வரை சுமார் 75 படகுகள் கரை திரும்பி குளச்சல் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட் டுள்ளது. மீதி படகுகள் கரையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றன என மீனவர்கள் தெரிவித்தனர். 2 மாத தடைக்காலத்திற்கு பின்பு மீண்டும் மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் முதல் நாளிலேயே நேற்று பாதியிலேயே கரை திரும்பியதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். அவர்களது வலைகளில் குறைந்த அளவிலான கணவாய் மீன்கள் மட்டுமே சிக்கி இருந்தன. இன்றும் கடலுக்கு செல்ல முடியாததால் விசைப் படகுகள், பைபர் வல்லங்கள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

    ×