search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசா"

    • இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய யாத்ரீகள் பல்வேறு மத விழாக்கள் மற்றும் நிகழ்வுகளைக் காண பாகிஸ்தானுக்கு வருகிறார்கள்.
    • சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு 163 விசாக்களை வழங்கி உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    1974-ன் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கான பாகிஸ்தான்-இந்தியா நெறிமுறையின் கட்டமைப்பின் கீழ், இந்த விசா வழங்கும் முறை உள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய யாத்ரீகள் பல்வேறு மத விழாக்கள் மற்றும் நிகழ்வுகளைக் காண பாகிஸ்தானுக்கு வருகிறார்கள்.

    இந்தப் பயணத்தின் போது யாத்ரீகர்கள் வேறு வேறு இடங்களுக்கிடையில் பஞ்ச சாஹிப், நங்கனா சாஹிப் மற்றும் கர்தார்பூர் சாஹிப் செல்வார்கள்.

    இந்நிலையில், ஜூன் 8 முதல் 17-ம் தேதி வரை திட்டமிடப்பட்ட வருடாந்திர திருவிழாவிற்காக சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு நேற்று 163 விசாக்களை வழங்கி உள்ளது.

    பாகிஸ்தானுக்கான உயர் கமிஷன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    குரு அர்ஜன் தேவ் தியாக தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானுக்கான உயர் கமிஷன் இந்த விசா வழங்கும் முயற்சியை மேற்கொண்டது. இந்த நல்ல சந்தர்ப்பத்தில் 'யாத்ரீகர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், அவர்களுக்கு நிறைவான யாத்திரை அமைய வாழ்த்துக்களையும்' உயர் கமிஷன் பொறுப்பாளர் அப்தாப் ஹசன் கான் தெரிவித்துள்ளார்.

    பணி அனுமதிக்காலம் முடிந்து தங்கியுள்ள வெளிநாட்டினர் எவ்வித தண்டனையும் இன்றி நாடு திரும்பும் பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அமீரக அரசு அமல்படுத்தியுள்ளது. #UAEAmnesty2018
    துபாய்:

    எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடான ஐக்கிய அமீரகத்தில் சுமார் 2.8 மில்லியன் இந்தியர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். 

    இந்திய தொழிலாளர்கள் மட்டுமல்லாது பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர்.

    பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி அனுமதிக்காலம் முடிந்தும் அந்நாட்டில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு வேலை நீட்டிப்பு மற்றும் ஊதியத்தை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மறுத்துவிட்டன. 

    இது தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்தன. விசாக்காலம் முடிந்தும் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் அவர்கள் தாய்நாடு திரும்புவதிலும் சிக்கல் இருந்தது.



    இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அமீரக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த பொதுமன்னிப்பு திட்டம் மூலம் சட்டவிரோதமாக இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நலனாக இருக்கும். இப்போதைய திட்டப்படி அவர்கள் நாட்டைவிட்டு அபராதம் எதுவும் செலுத்தாமல் வெளியேறலாம்.

    மேலும், வேலை இல்லாதவர்கள் வேலையை தேடிக்கொள்ள 6 மாதங்கள் அனுமதி வழங்கப்படுகிறது. இன்று முதல் பொதுமன்னிப்பு அமலாகியுள்ளதால் பலர் தங்களது சொந்த நாடு திரும்ப தங்களது நாட்டு தூதரகத்தில் குவிந்தனர். இன்று முதல் நாளே 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தாய்நாடு திரும்ப விண்ணப்பித்தனர்.

    மூன்று மாதங்களுக்கு இந்த பொதுமன்னிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    விசா முரண்பாட்டால் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த சீன வாலிபர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார்.
    ஆலந்தூர்:

    சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு விமானத்தில் வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் விசா மற்றும் பாஸ்போர்ட் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீனாவை சேர்ந்த ‌ஷயாங்க் என்ற வாலிபரின் ‘விசா’வில் முரண்பாடு இருந்தது. எனவே, அவர் அடுத்த விமானத்தில் மீண்டும் சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

    இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த 10 சீன மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்களுக்கான ‘விசா’வில் வராமல் சுற்றுலா ‘விசா’வில் அவர்கள் வந்த தாக குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பிரிட்டனை சேர்ந்த ஓரினச்சேர்க்கை பெண்ணின் துணைக்கு ஹாங்காங் அரசு விசா மறுத்து வந்த நிலையில், துணை விசா வழங்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #HongKong #QT
    சென்ட்ரல்:

    பிரிட்டனை சேர்ந்த ஓரினச்சேர்க்கை ஜோடி க்யூ.டி என்று பெயரின் முதல் எழுத்தால் குறிப்பிடப்பட்டனர். 2011-ம் ஆண்டு முதல் இந்த ஜோடி சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 2014-ம் ஆண்டில் டி என்பவருக்கு ஹாங்காங்கில் பணி கிடைத்துள்ளது. ஆனால், அவரது வாழ்க்கைத்துணையான க்யூவுக்கு விசா வழங்க அந்நாட்டு அரசு மறுத்து விட்டது.

    துணை விசா என்பது வாழ்க்கைத்துணைவிக்கு வழங்கப்படும் விசா ஆகும். இதன் மூலம் ஒரே விசாவில் தம்பதிகள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், க்யூடி தம்பதிக்கு இந்த விசா மறுக்கப்பட்டது. அரசின் உத்தரவுக்கு எதிராக கீழ்கோர்ட்டில் இந்த ஜோடி வழக்கு தொடர்ந்தனர்.

    தீர்ப்பு க்யூதம்பதிக்கு சாதகமாக வந்தாலும், அரசு அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. மூன்றாண்டுகளாக நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. க்யூடி ஜோடிக்கு துணை விசா வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கோல்ட்மேன் சாச்ஸ், மோர்கன் ஸ்டான்லே போன்ற பல நிறுவனங்கள் இந்த ஜோடிக்கு ஆதரவாக இருந்தது. ஆண், பெண் என்ற பாகுபாடு பார்ப்பது ஹாங்காங்கில் சட்டவிரோதம் என்றாலும், அங்கு ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி இல்லை. 

    ஹாங்காங்கிற்கு செல்லலாமா? என்பதைத் தீர்மானிக்கும் நபர்களிடம், சார்ந்திருக்கும் திறனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருத வேண்டும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர். 
    ×