search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வார்டு சபை கூட்டம்"

    • 2 வார்டுகள் வீதம் குறிப்பிட்ட பகுதிகளில் சாபா கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை மனுக்களாக பெறப்படுகிறது.
    • குறைகளை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    கோத்தகிரி,

    கோத்தகிரி சிறப்புநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய ஏதுவாக நாள் ஒன்றிற்கு 2 வார்டுகள் வீதம் குறிப்பிட்ட பகுதிகளில் சாபா கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை மனுக்களாக பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நேற்று 9-வது வார்டு பகுதிக்கான கூட்டம் கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கோத்தகிரி பேரூராட்சி தலைவி ஜெயக்குமாரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் முக்கிய குறைகளான நடைபாதை அமைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல், தெருவிளக்கு கம்பம் புதிதாக அமைத்தல் போன்றவை முக்கிய குறைகளாக கருதப்பட்டு அதனை உடனடியாக சரி செய்ய முடிவெடுக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் பேசிய பேரூராட்சி தலைவி ஜெயக்குமாரி அவர்கள் இப்பகுதியில் உள்ள குறைகளை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.இதே போன்று மிஷன் காம்பவுண்ட் பகுதியிலும் கூட்டம் நடைபெற்றது.

    • அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகளில் வார்டு சபை கூட்டம் நடந்தது.
    • சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அலங்காநல்லூர்

    உள்ளாட்சி தினத்தையொட்டி அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் வார்டு சபை கூட்டம் நடந்தது. இதில் சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். சம்பந்தப்பட்ட துறையி னரை அழைத்து உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார்.

    அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி தலைமை தாங்கினார். துணை தலைவர் சுவாமி நாதன், செயல் அலுவலர் ஜீலான் பானு, செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர் ரகுபதி, முன்னிலை வகித்தனர்.

    இதில் கவுன்சிலர்கள், வட்டார மருத்துவர் வளர்மதி, குழந்தைகள் திட்ட அலுவலர் உஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர்.

    இதேபோன்று பாலமேடு பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகளிலும் வார்டு சபை கூட்டம் நடந்தது. இதிலும் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    தி.மு.க. வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டிய ராஜன், துணை தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் தேவி, நகர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

    குடிநீர் விநியோகம், குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிடம் கட்டுவது, விதி மீறிய கட்டிடங்கள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இந்த கூட்டங்களில் எடுத்துரைத்து நிவாரணம் பெறப்பட்டது.

    அச்சம்பட்டி ஊராட்சி யில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுதா முருகன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா முன்னிலையில் ஊராட்சி செயலர் முருகேசுவரி தீர்மானங்களை வாசித்தார்.

    மாணிக்கம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா பாலமுருகன் தலைமையில் துணை தலைவர் ராஜேஷ் முன்னிலையில் ஊராட்சி செயலர் பெரிச்சி தீர்மானங்களை வாசித்தார்.

    இதேபோன்று அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 37 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

    • வடமதுரை பேரூராட்சி மக்களிடம் குறைகளை கேட்டறியும் முயற்சியாக வார்டு சபை கூட்டம் நடைபெற்றது.
    • பேரூராட்சியில் நடத்தப்பட்ட வார்டு சபை கூட்டத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்து ஆதரவு தெரிவித்ததுடன் தங்கள் கருத்துகளையும் எடுத்துரைத்தனர்.

    வடமதுரை:

    தமிழகத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது போல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் வடமதுரை பேரூராட்சி மக்களிடம் குறைகளை கேட்டறியும் முயற்சியாக முனியாண்டி கோவில் தெருவில் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் நிருபாராணி கணேசன் தலைமை வகித்தார். செயல்அலுவலர் செல்வராஜ், கவுன்சிலர்கள் சகுந்தலா, விஜயா, மகேஸ்வரி, சுப்பிரமணி, தி.மு.க நகர செயலாளர் கணேசன், செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் தெரிவிக்கையில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க சி.சி.டி.வி காமிராக்கள் அமைக்க வேண்டும். அரை கி.மீ தூரத்தில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பதிலாக காணப்பாடி செல்ல வேண்டிய நிலை இருப்பதால் இதன் எல்லை வரையறையை மாற்ற வேண்டும். மின்மோட்டார் கொண்டு வீடுகளில் தண்ணீர் திருடப்படுவதால் பெரும்பாலான வீடுகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. எனவே இதனை பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதற்கு பதில் அளித்த தலைவர் முறைகேடாக குடிநீர் எடுக்கும் வீடுகளில் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு அந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இணைப்பும் துண்டிக்கப்படும் என்றார். முதல் முயற்சியாக பேரூராட்சியில் நடத்தப்பட்ட வார்டு சபை கூட்டத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்து ஆதரவு தெரிவித்ததுடன் தங்கள் கருத்துகளையும் எடுத்துரைத்தனர்.

    இளநிலை உதவியாளர் அபிராமி உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

    ×