search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ward Council Meetings"

    • அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகளில் வார்டு சபை கூட்டம் நடந்தது.
    • சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அலங்காநல்லூர்

    உள்ளாட்சி தினத்தையொட்டி அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் வார்டு சபை கூட்டம் நடந்தது. இதில் சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். சம்பந்தப்பட்ட துறையி னரை அழைத்து உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார்.

    அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி தலைமை தாங்கினார். துணை தலைவர் சுவாமி நாதன், செயல் அலுவலர் ஜீலான் பானு, செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர் ரகுபதி, முன்னிலை வகித்தனர்.

    இதில் கவுன்சிலர்கள், வட்டார மருத்துவர் வளர்மதி, குழந்தைகள் திட்ட அலுவலர் உஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர்.

    இதேபோன்று பாலமேடு பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகளிலும் வார்டு சபை கூட்டம் நடந்தது. இதிலும் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    தி.மு.க. வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டிய ராஜன், துணை தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் தேவி, நகர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

    குடிநீர் விநியோகம், குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிடம் கட்டுவது, விதி மீறிய கட்டிடங்கள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இந்த கூட்டங்களில் எடுத்துரைத்து நிவாரணம் பெறப்பட்டது.

    அச்சம்பட்டி ஊராட்சி யில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுதா முருகன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா முன்னிலையில் ஊராட்சி செயலர் முருகேசுவரி தீர்மானங்களை வாசித்தார்.

    மாணிக்கம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா பாலமுருகன் தலைமையில் துணை தலைவர் ராஜேஷ் முன்னிலையில் ஊராட்சி செயலர் பெரிச்சி தீர்மானங்களை வாசித்தார்.

    இதேபோன்று அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 37 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

    ×