search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாங்கிய"

    • நாகரில் கைதானவர்கள் ‘திடுக்’ தகவல்
    • திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை கடத்தி கள்ள சந்தையில் விற்கும் கும்பல் அதிகரித்து வருகிறது.

    நாகர்கோவில்:

    திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள் ஆம்பர் கிரீசில் இருந்து உயர்ரக வாசனை திரவியங்கள் வெளிநாடு களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மருந்து பொரு ளாகவும், மூலப்பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. எனவே திமிங்கல உமிழ்நீர் கட்டிக்கு கள்ள சந்தையில் மதிப்பு அதிகமாகும். இதனால் திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை கடத்தி கள்ள சந்தையில் விற்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தில் அவ்வப்போது திமிங்கலம் உமிழ்நீர் கட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் போது வனத்துறையினரும், போலீசாரும் பிடித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் நெல்லையிலிருந்து குமரி மாவட்டத்திற்கு திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள் கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கும், வனத்துறையின ருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து வடசேரி பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது காரில் வந்த அவர் கும்பலை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 10 கிலோ திமிங்கலம் உமிழ்நீர் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. போலீசார் அதை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் விசாரித்தபோது உமிழ்நீர் கட்டியை கடத்தி வந்தது நெல்லை மாவட்டம் மேல கருங்குளத்தை சேர்ந்த அருணாச்சலம், மேல முன்னீர் பள்ளத்தை சேர்ந்த நாராயணன், மேலப்பாளை யத்தை சேர்ந்த வேலாயுதம், நாங்குநேரியை சேர்ந்த சுந்தர் என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து காரும் பறிமுதல் செய்யப் பட்டது. பறிமுதல் செய்யப் பட்ட திமிங்கல உமிழ்நீரின் மதிப்பு ரூ.12 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உமிழ்நீர் கட்டியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் ரூ.2 லட்சத்திற்கு வாங்கியதாகவும் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே பதுக்கி வைத்த தாகவும் கூறினர். தற்பொழுது அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக தெரி வித்தனர். யாரிடம் விற்பனை செய்ய கொண்டு வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • லாரி உரிமையாளர் கணேசன் (வயது 50). இவருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது.
    • நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக் கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் கணேசன் (வயது 50). இவருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக் கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார்.

    ரு. 2 ஆயிரம் லஞ்சம்

    அதனை செய்து கொடுக்க சங்ககிரி நில அளவைத் துறை சுற்றுக்குழு நில அளவையராக பணியாற்றி வந்த நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அத்திமரபட்டி பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்குமார் (வயது 40) ரூ.2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் இது தொடர்பாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து வைத்தீஸ்குமாரை பொறி வைத்து பிடிப்பதற்காக திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கணேசிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

    அந்த பணத்துடன் சங்க–கிரி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற அவர் வைத்தீஸ்குமாரிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் வைத்தீஸ் குமாரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    சிறையில் அடைப்பு

    இதையடுத்து, கைது செய்யப்பட்ட வைத்தீஸ்கு–மாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் நேற்றிரவு கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த வைத்தீஷ்குமார் நேற்று 3-ம் ஆண்டு தொடக்க நாளில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    ×