search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்கவாதம்"

    • நடேசன் (வயது 40) இவருக்கு 4 தம்பிகள் உள்ளனர். இதில் இவருக்கும் இவரது கடைசி தம்பி பாக்கியராஜ் (29) என்பருக்கும் பாகப் பிரிவினை தொடர்பாக சிக்கல் இருந்து வந்தது.
    • இந்நிலையில் இன்று காலை நடேசனுக்கும், பாக்கியராஜிக்கும் இடையே சொத்தின் எல்லைகள் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 40) இவருக்கு 4 தம்பிகள் உள்ளனர். இதில் இவருக்கும் இவரது கடைசி தம்பி பாக்கியராஜ் (29) என்பருக்கும் பாகப் பிரிவினை தொடர்பாக சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை நடேசனுக்கும், பாக்கியராஜிக்கும் இடையே சொத்தின் எல்லைகள் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இது சண்டையாக மாறியது. அப்போது நடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாக்கியராஜ் மீது தாக்குதல் நடத்தினார். இதில் தலை மற்றும் கழுத்தில் பாக்கியராஜ் பலத்த காயமடைந்தார்.

    மேலும், கத்தி வெட்டை தடுக்க முயற்சித்த போது பாக்கியராஜின் இரண்டு விரல்கள் துண்டானது. இதில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பாக்கியராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் தம்பி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ள நடேசனை தேடி வருகின்றனர். மேலும், அவரது குடும்பத்தில் இருந்து ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் குன்னத்தூர் கிராமத்தில் அசம்பாவதிங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 40) இவருக்கு 4 தம்பிகள் உள்ளனர். இதில் இவருக்கும் இவரது கடைசி தம்பி பாக்கியராஜ் (29) என்பருக்கும் பாகப் பிரிவினை தொடர்பாக சிக்கல் இருந்து வந்தது.இந்நிலையில் இன்று காலை நடேசனுக்கும், பாக்கியராஜிக்கும் இடையே சொத்தின் எல்லைகள் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இது சண்டையாக மாறியது. அப்போது நடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாக்கியராஜ் மீது தாக்குதல் நடத்தினார். இதில் தலை மற்றும் கழுத்தில் பாக்கியராஜ் பலத்த காயமடைந்தார். மேலும், கத்தி வெட்டை தடுக்க முயற்சித்த போது பாக்கியராஜின் இரண்டு விரல்கள் துண்டானது. இதில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பாக்கியராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் தம்பி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ள நடேசனை தேடி வருகின்றனர். மேலும், அவரது குடும்பத்தில் இருந்து ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாதுகாப்பு பணியில் போலீசார்

    இச்சம்பவத்தால் குன்னத்தூர் கிராமத்தில் அசம்பாவதிங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மது போதை உச்சத்திற்கு சென்ற சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வீடு திரும்ப முடிவு செய்தார்.
    • அந்த பஸ்சில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளிடமும் போதையில் இருந்த சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு டாஸ்மாக்கில் விற்பனை யாளராக பணிசெய்யும் வாலிபரும், சிதம்பரம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி செய்யும் வாலிபரும் சேர்ந்து சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று இரவு மது அருந்தினர்.   இதில் மது போதை உச்சத்திற்கு சென்ற சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வீடு திரும்ப முடிவு செய்தார். சிதம்பரம் பஸ் நிலையத்தினுள் சென்ற அவர், வேலூரில் இருந்து கடலூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அங்கு பணியில் இருந்த கண்டக்டரிடம், வடலூருக்கு டிக்கெட் கேட்டார்.  அப்போது இந்த பஸ் கடலூருக்கு செல்கிறது. வடலூருக்கு செல்லாது என்று கண்டக்டர் கூறினார். அப்புறம் எதற்கு வடலூர் என பஸ்சில் எழுதப்பட்டுள்ளது என சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் கண்டக்டரிடம் கேட்டுள்ளார். இதற்கு கடலூரில் இருந்து வேலூருக்கு செல்லும் போது வடலூர் வழியாக செல்லும், வேலூரில் இருந்து கடலூர் வரும் போது வடலூருக்கு போகாது என கண்டக்டர் போதையில் இருந்த டாஸ்மாக் ஊழியருக்கு விளக்கமளித்தார்.

    இதனை ஏற்காத டாஸ்மாக் ஊழியர், தவறான வழித்தடத்தில் பஸ் இயக்குகிறாயா, வடலூர் வழியாக சென்று என்னை இறக்கிவிட வேண்டும் என்று கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அந்த பஸ்சில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளிடமும் போதையில் இருந்த சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதில் செய்வதறியாது திகைத்த பஸ் டிரைவர், பஸ்சினை சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு பஸ்சை நிறுத்திய டிரைவர், கண்டக்டர் பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த விஷயங்களை கூறினர்.

    இதையறிந்த போதையில் இருந்த டாஸ்மாக் ஊழியர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பியோட முயற்சித்தார். இதில் நிலைதடுமாறிய அவர், கீழே விழுந்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த வெளியில் வந்த போலீசாரிடம், தன்னை டிரைவர், கண்டக்டர் இருவரும் சேர்ந்து தாக்கி விட்டதாக புகார் அளித்தார்  அப்போது திடீரென சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் விற்பனையாளர் பஸ்சின் முன்பாக சாலையில் படுத்து, பஸ்சினை எடுக்க முடியாமல் வழிமறித்தார். அப்போது அங்கு வந்த சிதம்பரம் டாஸ்மாக் விற்பனையாளர், இவருடன் சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இதனால் எரிச்சலடைந்த போலீசார், 2 பேரையும் குண்டு கட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, அரசு பஸ்சினை போதை டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து விடுவித்தனர். மேலும், அவர்களை போலீஸ் நிலையத்தில் அமரவைத்து, 2 பேருக்கும் போதை தெளிந்தவுடன் அவர்களிடம் கடிதம் வாங்கி கொண்டு விடுவித்தனர். இந்த வீடியோ சிதம்பரம் பகுதியில் சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×