search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருசாபிஷேகம்"

    • காளியம்மன் உள்பட பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
    • அம்மனுக்கு பட்டு ஆடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் வருசாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவில் முன்பு யாக சாலைகள் அமைக்க ப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க வருசாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காளியம்மன் உள்பட பரிவார தெய்வங்கள் தலைமலை வீரப்பன், பேச்சியம்மன், கன்னி விநாயகர், கருப்பசாமி, மாரியம்மன், பார்வதி, சின்ன மாரியம்மன், சின்ன காளியம்மன் ஆகிய வற்றிற்கு விபூதி, குங்குமம், சந்தனம், பன்னீர், எலுமிச்சை, இளநீர் உள்பட 18 வகையான நறுமண பொ ருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    சந்தன காப்பு அலங்காரத்தில் பட்டு ஆடைகள், மலர் மாலை கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டி சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்ன தானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பவுர்ணமி பூஜை வழி பாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

    • ஜெய்மகா காளீஸ்வரி கோவிலின் 30-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.
    • வருடாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சஞ்சீவி மலை கிழக்கு அடிவாரத்தில் உள்ள ஜெய்மகா காளீஸ்வரி கோவிலின் 30-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி பொன்னுசாமி தலைமை தாங்கினார். சேலம் உதவி ஆணையாளர் ராமசாமி, டாக்டர் கோதண்டராமன், தொழிலதிபர்கள் என்.ஆர். சுப்பிரமணியராஜா, பீமராஜா, கே.ஏ.சுப்பராஜா, ஹரிஹரன், தர்மகிருஷ்ண ராஜா ஆகியோரது குடும்ப வகையறாக்கள் முன்னிலை வகித்தனர். அம்மனுக்கு வருடாபிஷேகமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடந்தன. மேலும் ஓம் சக்தி வழி விடு விநாயகர், பாலசுப்பிரமணியசுவாமி, சந்தனகருப்புசாமி, பீம பைரவர், காரிய சித்தி விநாயகர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள், விசேஷ பூஜைகளும் நடந்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வருடாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. தர்மகர்த்தா டாக்டர் செந்திலாதிபன் அன்னதானத்தை ெதாடங்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா டாக்டர் செந்திலாதிபன்,டாக்டர் மணிகண்ணன் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • கச்சி விநாயகர் கோவிலிருந்து பால்குடம் எடுத்து வீதி உலா வரப்படுகிறது.
    • பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுடன் இணைந்த அறம் வளர்த்தநாயகி கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும். இது தென் மாவட்டங்களில் முக்கிய கோவில்களில் ஒன்றாகும்.

    இக்கோவிலில் வருகிற 31-ந் தேதி வருசாபிஷேக விழா நடக்கிறது. இதை முன்னிட்டு 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6மணிக்கு யாகசாலை பூஜைகள், பல்வேறு மந்திரங்கள் ஒதபடும். காலை 7மணிக்கு கச்சி விநாயகர் கோவிலிருந்து பால்குடம் எடுத்து வீதி உலா வந்து கோவிலுக்கு வருதல். காலை 9மணி முதல் நண்பகல் 12மணிக்குள் மூலஸ்தான சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகேஸ்வர பூஜை, உச்சிக்கால தீபாராதனை ஆகியவை நடக்கிறது. பகல் 12மணிக்கு சிறப்பு அன்னதானம், இரவு 7மணிக்கு சிறப்பு திரு விளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அலங்காரம் அர்ச்சனை, கற்பூர ஆராத்தி, இரவு 8.30மணிக்கு உற் சவமூர்த்திக்கு சோடாச உபசார தீபாராதனை, இரவு 9மணிக்கு சுவாமி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடக்கிறது.

    ஏற்பாடுகளை தக்கார் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், வருசாபிஷேக சிறப்பு கட்டளைதாரர்கள், குலசேகரன்பட்டினம் சைவ வேளாளர் பெருமக்கள் செய்து வருகின்றனர்.

    • வருசாபிஷேகத்தை முன்னிட்டு கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி மீனாட்சி அம்பாள் சொக்கலிங்க சுவாமி கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது. வருசாபிஷேகத்தை முன்னிட்டு கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பூஜை களை கோவில் அர்ச்சகர் சிவா பட்டர், கண்ணன் பட்டர், முத்துக்குட்டி பட்டர் நடத்தினர். விழாவில் செயல் அலுவலர் ஸ்ரீதேவி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சித்துராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கட்ராமன், உபயதாரர்கள் கணேசன், செல்லத்துரை, செல்வ நாராயணன், பால்ராஜ், மரியதாஸ், வைத்தியலிங்கம் மற்றும் பிரதோஷ கமிட்டி குமார், ஆண்டியப்பன், மகேந்திரன், உதயகுமார், ரமேஷ், முன்னாள் திருப்பணி கமிட்டி ஆவுடையப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×