search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிட்டர்"

    • 5 கிலோ பாக்கெட் கோதுமை மாவு பாக்கெட்டில் மொத்த விலையுடன், ஒரு கிலோவின் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும்.
    • பாக்கெட்டுகளில் ஒரு பென்சில் அல்லது பேனாவின் யூனிட் விலையை குறிப்பிட வேண்டும்.

    சென்னை:

    பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில் ஒட்டு மொத்த விலையுடன் ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். இந்த புதிய நடைமுறையை மத்திய அரசு இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.

    ஏற்கெனவே இந்த நடைமுறை பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. இன்று முதல் அது நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஒரு கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், அதிகபட்ச சில்லறை விலையுடன், ஒரு கிலோவிற்கு 'யூனிட் விற்பனை விலை' என்ன என்பதை அச்சிட வேண்டும்.

    அதே போல ஒரு லிட்டருக்கு மேல் அளவு கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் போது அதற்கு அதிக பட்ச சில்லறை விலையுடன் ஒரு லிட்டருக்கு யூனிட் விற்பனை விலை என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக 5 கிலோ பாக்கெட் கோதுமை மாவு பாக்கெட்டில் மொத்த விலையுடன், ஒரு கிலோவின் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும்.

    அதேபோல் ஒரு கிலோவிற்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருளுக்கு அதன் மொத்த விலையுடன், ஒரு கிராம் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும். ஒரு லிட்டருக்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட பொருளுக்கு ஒரு மில்லி லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். ஒரு மீட்டருக்கு மேல் அளவு கொண்ட பொருளுக்கு ஒரு மீட்டருக்கான விலையையும், ஒரு மீட்டருக்கு குறைவான அளவு கொண்ட பொருளுக்கு ஒரு செ.மீ. விலையையும் குறிப்பிட வேண்டும்.

    பேனா மற்றும் பென்சில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையை கொண்ட பாக்கெட்டுகளில் ஒரு பென்சில் அல்லது பேனாவின் யூனிட் விலையை குறிப்பிட வேண்டும்.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த புதிய நடைமுறையால் பொருட்களை வாங்குபவர்கள் சரியான முறையில் தேர்ந்தெடுத்து பொருட்களை வாங்க முடியும். இன்று முதல் இந்த புதிய நடைமுறை கட்டாயமாகிறது. இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

    பால், டீ, பிஸ்கட், சமையல் எண்ணெய், கோதுமை மாவு, குளிர்பானம், குடிநீர், குழந்தைகளுக்கான உணவு, பருப்பு வகைகள், தானியங்கள், சிமெண்ட் பை, பிரட் உள்ளிட்ட 19 வகையான பொருட்களை பேக்கேஜிங் செய்வதற்கான 'குறிப்பிட்ட அளவு' என்ற விதிமுறைகளும் நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்கள் சந்தையில் விற்கும் அனைத்து பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களின் அளவை தீர்மானிக்க முழு சுதந்திரம் உள்ளது. அனைத்து அளவுகளிலும் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் கிடைப்பதால் நுகர்வோர் தங்களுக்கு தேவையா னதை தேர்வு செய்து வாங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குளச்சல், 

    மீனவர்களின் வள்ளங்களுக்கு அரசு மானிய விலையில் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மண்எண்ணை வழங்குகிறது. சிலர் இதனை வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

    இந்தநிலையில் நேற்று குளச்சல் மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் மணவாளக்குறிச்சி, கடியபட்டணம், முட்டம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். முட்டம் சோதனைச்சாவடி அருகே செல்லும்போது, சந்தேகத்திற்கிடமாக ஒரு மீன் கூண்டு வண்டி வந்தது.

    உடனே போலீசார் அந்த வண்டியை நிறுத்தினர். அப்போது டிரைவர் மற்றும் வண்டியிலிருந்த ஒருவர், வண்டியை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சித்தனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

    பின்னர் மீன் கூண்டு வண்டியை திறந்து பார்க்கும்போது, வண்டிக்குள் 30 கேன்களில் சுமார் 1000 லிட்டர் மானிய மண்எண்ணை இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, மீன் வண்டியில் வந்த 2 பேரையும் குளச்சல் மரைன் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் மண்எண்ணை மற்றும் பிடிபட்ட இருவரையும் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • ஆட்டோவில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு கேன்களில் 140 லிட்டர் மண் எண்ணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
    • பறிமுதல் செய்த மண் எண்ணை மற்றும் ஆட்டோவை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் படகுகளுக்கு வழங்கப்படும் அரசின் மானிய விலை மண் எண்ணை அதிக அளவில் புதுக்கடை வழியாக கேரளாவுக்கு கடத்தப்படுவதாக புகார் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை புதுக்கடை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு சுனில், போலீஸ் ஜெனிஷ் ஆகியோர் அம்சி சந்திப்பு பகுதியில் வைத்து கேரளா பதிவெண் கொண்ட ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். ஆட்டோவில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு கேன்களில் 140 லிட்டர் மண் எண்ணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று நடத்திய விசாரணையில் கேரளா, பீமா பள்ளி வள்ள கடவு என்ற இடத்தை சேர்ந்த ஹசன் கண்ணு (வயது 40) என்பவர், பூந்துறை சாலி (29) என்ற பெண்ணுடன் கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்துவது தெரிய வந்தது. மண் எண்ணையை இனயம் புத்தன்துறையை சேர்ந்த பிரமிளா (42) என்பவரி டமிருந்து வாங்கியதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர். பறிமுதல் செய்த மண் எண்ணை மற்றும் ஆட்டோவை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    ×