search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண் எண்ணை பறிமுதல்"

    • ஆட்டோவில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு கேன்களில் 140 லிட்டர் மண் எண்ணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
    • பறிமுதல் செய்த மண் எண்ணை மற்றும் ஆட்டோவை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் படகுகளுக்கு வழங்கப்படும் அரசின் மானிய விலை மண் எண்ணை அதிக அளவில் புதுக்கடை வழியாக கேரளாவுக்கு கடத்தப்படுவதாக புகார் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை புதுக்கடை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு சுனில், போலீஸ் ஜெனிஷ் ஆகியோர் அம்சி சந்திப்பு பகுதியில் வைத்து கேரளா பதிவெண் கொண்ட ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். ஆட்டோவில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு கேன்களில் 140 லிட்டர் மண் எண்ணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று நடத்திய விசாரணையில் கேரளா, பீமா பள்ளி வள்ள கடவு என்ற இடத்தை சேர்ந்த ஹசன் கண்ணு (வயது 40) என்பவர், பூந்துறை சாலி (29) என்ற பெண்ணுடன் கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்துவது தெரிய வந்தது. மண் எண்ணையை இனயம் புத்தன்துறையை சேர்ந்த பிரமிளா (42) என்பவரி டமிருந்து வாங்கியதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர். பறிமுதல் செய்த மண் எண்ணை மற்றும் ஆட்டோவை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    ×