search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிடிவி"

    • ஆப்பிள் ஐபோன் தோற்றம் கொண்ட புது ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புது ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட ஹூபென் டி7510 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    லிடிவி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டியுடன் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் தோற்றம் பார்க்க ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. புது சாதனம் பற்றிய முழு விவரங்களை லிடிவி இதுவரை அறிவிக்கவில்லை.

    புதிய லிடிவி S1 ப்ரோ மாடலில் ஹூபென் டி7510 பிராசஸர் உள்ளது. இந்த பிராசஸர் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸருக்கு நிகரான செயல்திறன் வழங்கும் சீன சிப்செட் ஆகும். இது அந்த பகுதியில் மிகவும் பிரபலமான பிராசஸராக இருக்கிறது. இதுதவிர ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை.

    டிசைனை பொருத்தவரை லிடிவி S1 ப்ரோ தோற்றத்தில் ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் போன்று காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் மூன்று கேமரா சென்சார்கள் ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்றே கச்சிதமாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் மாத்திரை வடிவ கட்-அவுட் உள்ளது. இது ஐபோனில் உள்ள டைனமிக் ஐலேண்ட் போன்ற அம்சத்தை வழங்கும் என தெரிகிறது.

    லிடிவி S1 ப்ரோ மாடலின் விலை ஆயிரம் யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 016 அல்லது 145 டாலர்களுக்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    ×