search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரியில் இருந்து"

    • லாரியில் இருந்த கரும்புகள் குவியலாக சரிந்து சாலையில் கொட்டியது.
    • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல்-அத்தாணி ரோட்டில் தினமும் ஆயிர க்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

    ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியில் இருந்து பவானி செல்லும் சாலை, அத்தாணி வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலை, கவுந்தப்பாடி செல்லும் சாலை மற்றும் அந்தியூர் செல்லும் சாலை என 4 வழி சாலைகள் இந்த பகுதியில் உள்ளன.

    ஆப்பக்கூடல் நால்ரோடு அருகே தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருவ தால் தினமும் லாரிகளில் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆப்பக்கூடல்- பவானி ரோட்டில் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது.

    அந்த லாரி ஆப்பக்கூடல் நால்ரோடு வந்து கவுந்தப்பாடி சாலை யில் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்த கரும்புகள் குவியலாக சரிந்து சாலையில் கொட்டியது.

    இதனால் நால்ரோடு வழியாக வந்து செல்லும் பள்ளி வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு உட னடியாக போலீசார் மற்றும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரியின் சார்பிலோ கரும்பு குவியலை அகற்ற யாரும் முன்வரவில்லை.

    நீண்ட நேரம் கழித்து ஆலையில் இருந்து ஜே.சி.பி. கொண்டு வரப்பட்டு ரோட்டில் கொட்டி கிடந்த கரும்பு குவியலை சாலையில் இருந்து ஓரமாக ஒதுக்கி விட்டனர். ஆனால் அந்த இடத்தில் இருந்து உடனடி யாக கரும்புகளை அப்புற ப்படுத்தவில்லை.

    இதனால் ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மாதேஷ் லாரியில் இருந்து கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்தார்.
    • தலை மற்றும் வலது முழங்கையில் பலத்த அடிபட்டது.

    ஈரோடு:

    கர்நாடகா மாநிலம் மார்ட்டல்லி, கொல்லேகால் தாலுகா, ஒட்டரெதொட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (38). லாரி கிளீனர். இன்னும் திருமணம் ஆகவில்லை.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலம் மேட்டூர் சேத்தான் கோட்டாயை சேர்ந்த தனது தாய் மாமன் பாலசுப்பிர–மணியம் என்பவருக்கு சொந்தமான லாரியில் கிளீனராக வேலைக்கு சேர்ந்து உள்ளார்.

    இந்நிலையில் சம்பத்தன்று கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் சிவகிரி கைகாட்டி அருகே உள்ள ஒரு தனியார் ரைஸ் மில்லுக்கு மாதேஷ் வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நெல் மூட்டைகளை இறக்காமல் நெல் மூட்டைகளுடன் தலைய நல்லூர் ஈஸ்வரன் கோவில் அருகே லாரியை நிறுத்திவிட்டு பாலசுப்பிரமணி மற்றும் மாதேஷ் இருவரும் படுத்து தூங்கினர்.

    பின்னர் காலை 8 மணி அளவில் மாதேஷ் லாரியில் இருந்து கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் வலது முழங்கையில் பலத்த அடிபட்டது.

    இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோத்து விட்டு மாதேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து அத்தாணி ரோட்டில் லாரியில் இருந்து ஆயில் கசிந்து சாலையில் கொட்டி கொண்டே சென்றது.
    • ஆயில் கசிந்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தடுமாற்றம் அடைந்து ஆயிலின் பசை தன்மையால் சாலையில் விழுந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து அத்தாணி ரோட்டில் ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியில் இருந்து ஆயில் கசிந்து சாலையில் கொட்டி கொண்டே சென்றது.

    அப்போது அந்த வழியாக கார், இரு சக்கர வாகனங்கள் வந்தது. ஆயில் கசிந்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தடுமாற்றம் அடைந்து ஆயிலின் பசை தன்மையால் சாலையில் விழுந்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறை க்கும் தகவல் தெரி விக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் ஆயில் கசிந்த பகுதிகளில் டயர்களை போட்டு அந்த பகுதியில் வாகனங்கள் வராமல் தடுக்கப்பட்டு மணல் போட்டு சரி செய்தனர்.

    இதனால் வாகனங்களில் வந்தவர்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்த னர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பும் பர பரப்பும் அந்தப் பகுதியில் நிலவியது.

    ×