search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The teenager fell"

    • மாதேஷ் லாரியில் இருந்து கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்தார்.
    • தலை மற்றும் வலது முழங்கையில் பலத்த அடிபட்டது.

    ஈரோடு:

    கர்நாடகா மாநிலம் மார்ட்டல்லி, கொல்லேகால் தாலுகா, ஒட்டரெதொட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (38). லாரி கிளீனர். இன்னும் திருமணம் ஆகவில்லை.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலம் மேட்டூர் சேத்தான் கோட்டாயை சேர்ந்த தனது தாய் மாமன் பாலசுப்பிர–மணியம் என்பவருக்கு சொந்தமான லாரியில் கிளீனராக வேலைக்கு சேர்ந்து உள்ளார்.

    இந்நிலையில் சம்பத்தன்று கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் சிவகிரி கைகாட்டி அருகே உள்ள ஒரு தனியார் ரைஸ் மில்லுக்கு மாதேஷ் வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நெல் மூட்டைகளை இறக்காமல் நெல் மூட்டைகளுடன் தலைய நல்லூர் ஈஸ்வரன் கோவில் அருகே லாரியை நிறுத்திவிட்டு பாலசுப்பிரமணி மற்றும் மாதேஷ் இருவரும் படுத்து தூங்கினர்.

    பின்னர் காலை 8 மணி அளவில் மாதேஷ் லாரியில் இருந்து கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் வலது முழங்கையில் பலத்த அடிபட்டது.

    இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோத்து விட்டு மாதேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்கரைப் புதூர் அருகே வந்த போது அந்த பகுதியில் சாலை மற்றும் பாலம் அமைக்க தோண்டப்பட்டு இருந்த குழியில் மோட்டார் சைக்கிளுடன் கோகிலன் தவறி விழுந்தார்.
    • சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கோகிலனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரக்கன் கோட்டையைச் சேர்ந்தவர் கோகிலன் (22). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு இவர் தனது நண்பரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு தாளக்கொம்பு–புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். பின்னர் அவரை இறக்கி விட்டு விட்டு மீண்டும் கோபிசெட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது புதுக்கரைப் புதூர் அருகே வந்த போது அந்த பகுதியில் சாலை மற்றும் பாலம் அமைக்க தோண்டப்பட்டு இருந்த குழியில் மோட்டார் சைக்கிளுடன் கோகிலன் தவறி விழுந்தார்.

    சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கோகிலனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குழியில் கிடந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அத்தாணி ரோடு பகுதியில் பொரிக் கடை எதிரே கெட்டி விநாயகர் கோவில் பிரிவு உள்ளது. இந்த ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ேராட்டின் குறுக்கே கழிவுநீர் வடிகால் கட்டும் பணி நடந்தது.

    அந்த பணி தற்போது நிறைவு பெற்று அந்த 2 பகுதிகளிலும் திட்டுகள் அமைக்கப்பட்டது.

    ஆனால் கழிவுநீர் செல்லக்கூடிய சாலை வரை அந்த தடுப்புச் சுவரை கட்ட வேண்டும் இல்லை யென்றால் பேரிகேட் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பக்க வாட்டில் நிலை தடுமாறி அந்த பெரிய கழிவுநீர் கால்வாயில் விழுந்து விட்டார். இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் யாரும் வர வில்லை.

    இதனால் அவரை மேலே தூக்கி விடுவதற்கு ஆட்கள் இல்லாமல் சிறிது நேரத்துக்கு பிறகு அவரே மேலே ஏறி சாலையில் சென்றவர்களை அழைத்தார். இதையடுத்து பொதுமக்கள் கழிவு நீர் வடிகாலில் இருந்த இருசக்கர வாகனத்தை மேலே தூக்கினர்.

    இதையடுத்து அங்கு இருந்து வீடு திரும்பி னார் என்பது குறிப்பி டத்தக்கது.

    எனவே இதனை கருத்தில் கொண்டு மேலும் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க நெடுஞ் சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

    ×