மேம்பாலத்துக்கு தோண்டிய குழியில் தவறி விழுந்த வாலிபர்

புதுக்கரைப் புதூர் அருகே வந்த போது அந்த பகுதியில் சாலை மற்றும் பாலம் அமைக்க தோண்டப்பட்டு இருந்த குழியில் மோட்டார் சைக்கிளுடன் கோகிலன் தவறி விழுந்தார்.சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கோகிலனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
மேம்பாலத்துக்கு தோண்டிய குழியில் தவறி விழுந்த வாலிபர்
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரக்கன் கோட்டையைச் சேர்ந்தவர் கோகிலன் (22). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு இவர் தனது நண்பரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு தாளக்கொம்பு–புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். பின்னர் அவரை இறக்கி விட்டு விட்டு மீண்டும் கோபிசெட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

அப்போது புதுக்கரைப் புதூர் அருகே வந்த போது அந்த பகுதியில் சாலை மற்றும் பாலம் அமைக்க தோண்டப்பட்டு இருந்த குழியில் மோட்டார் சைக்கிளுடன் கோகிலன் தவறி விழுந்தார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கோகிலனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குழியில் கிடந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com