search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் விபத்து பலி"

    • மணி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த வடமதுரை கொல்லம்பட்டியை சேர்ந்த அழகுமலை என்பவரது மகன் மணி (வயது23). டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான மணி நேற்று இரவு கொல்லம்பட்டி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

    அதேபோல் திண்டுக்கல் அருகே செல்லமந்தாடியைச் சேர்ந்த பிச்சைமணி என்பவரது மகன் மணிமாறன் (33). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். குடிபழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்று விட்டார். நேற்று இரவு மதுபோதையில் அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கேசவன், தனிப்படை காவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • ரெயில்வே அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அனைவரும் ஒரே குழுவாக பணியாற்றி வருகின்றனர்.

    பாட்னா:

    பீகாரில் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ஸ்டேஷன் அருகே வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட சம்பவத்தில் மீட்பு பணி நடந்து வருகிறது. இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது குறித்து ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில், "பக்சர் மாவட்டத்தில் ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், மாவட்ட நிர்வாகம், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அனைவரும் ஒரே குழுவாக பணியாற்றி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போர் அறை இயங்குகிறது. மீட்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். அதன்பிறகு உடனடியாக தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்படும்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

    • விபத்து குறித்து தகவல் அறிய ரெயில்வே தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் விபத்து நிவாரண வாகனம் சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளது.

    பாட்னா:

    டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் (12506) 3 பெட்டிகள் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே இரவு சுமார் 9.35 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானார்கள்.

    இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மேலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயம் அடைந்த பயணிகளை மீட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் விபத்து நிவாரண வாகனம் சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளதாக கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து விபத்து குறித்து தகவல் அறிய ரெயில்வே தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி

    PNBE helpline:- 97714 49971

    DNR helpline:- 89056 97493

    COMM CNL:- 77590 70004

    ARA helpline:- 83061 82542

    ஆகிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    ×