search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ருமட்டாய்டு ஆர்தரைடிஸ் நோய்"

    • விரல்களை மடக்க இயலாத நிலை, நடப்பதற்கு சிரமம்.
    • புளிப்பான உணவுகள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    ருமட்டாய்டு ஆர்தரைடிஸ் நோய்' சித்த மருத்துவத்தில் 'வளி அழல் கீல் வாயு' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு 'தன்னுடல் எதிர்ப்பு நோய்'. நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு, மூட்டுகள் மற்றும் இணைப்புத் திசுக்களை சேதப்படுத்துவதால் இந்த நோய் பாதிப்பு வருகிறது.

    கை,கால், மணிக்கட்டு, கணுக்கால், விரல்கள் ஆகிய கீல்களில் நாள்பட்ட அழற்சி அல்லது வலியை ஏற்படுத்தும். அந்த இடங்களில் சூடு, சிவப்பு நிறம், எரிச்சல் அல்லது வலியையும் உண்டாக்கும். என்ன மருத்துவம் பார்த்தாலும், அதற்கு அடங்காமலும், சில நேரங்களில் மருத்துவத்திற்கு அடங்கினாலும் சிறிது நாட்களில் மீண்டும் திரும்பி வருவதுமாக இருக்கும் குணம் கொண்டது இந்த நோய். இதனால் பாதிக்கப்பட்ட மூட்டு பகுதிகளை நீட்டவும், நன்றாய் மடக்கவும் முடியாது.

    மேலும் இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தூக்க மின்மை, அவ்வப்போது லேசான காய்ச்சல், காலையில் எழுந்தவுடன் கை விரல்கள், மூட்டுகளில் விரைப்புத் தன்மை, விரல்களை மடக்க இயலாத நிலை, நடப்பதற்கு சிரமம், உடல் பலவீனம் போன்ற பாதிப்புகள் இருக்கும்.

    ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை ரத்தத்தில் 'ஆர்.ஏ' மற்றும் சைக்ளிக் சிட் ருலினேடட் பெப்டைடு (சி.சி.பி) பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சைகள் சித்தர்களால் கூறப்பட்டுள்ளன. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதையும், புளிப்பான உணவுகள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    இந்த நோய் தாக்கியவர்களுக்கு வாதமும், பித்தமும் அதிகரித்திருக்கும். இதை சமன் செய்ய சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி பேதி மருந்து மற்றும் வாந்தி மருந்துகள் எடுத்து விட்டு அதன்பிறகு நோய்க்குரிய மருந்துகளை சாப்பிட வேண்டும். மருந்து உண்ணும் காலத்தில் எளிதில் செரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.

    கீழ்க்கண்ட சிகிச்சை முறைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.

    1) வங்கச் சுண்ணம், முத்துப்பற்பம், தங்க பற்பம் இவற்றை வகைக்கு 65 மி.கி. எடுத்து பாலில் இரு வேளை சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச்செந்தூரம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி, முத் துச்சிப்பி பற்பம் 200 மி.கி. இவைகளை இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    3) உளுந்து தைலம், சிவப்பு குங்கிலிய தைலம், வாதகேசரி தைலம் இவைகளில் ஒன்றை வலி உள்ள இடங்களில் மெதுவாக பூசி வர வேண்டும்.

    ×