search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவம். ஜெய் ஹிந்த்"

    • 76-வது ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தனது வாழ்த்துகளை தெரிவித்தார்
    • இராணுவ சேவையில் தியாகம் செய்த அனைவரையும் மூன்று சேவைத் தலைவர்கள் கௌரவிக்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி, இந்தியா தனது வீரம் மிக்க இந்திய இராணுவத்தை பெருமைப்படுத்தவும் ,நன்றி செலுத்தவும் இந்திய இராணுவ தினத்தை கொண்டாடுகிறது.

    1949ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியான மார்ஷல் கே.எம் கரியப்பாவின் 76வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

    மார்ஷல் கே எம் கரியப்பா ஜனவரி 15, 1949 அன்று பிரிட்டிஷ் தலைமை தளபதியான ஜெனரல் பிரான்சிஸ் புட்சருக்குப் பிறகு இந்திய இராணுவத்தின் தளபதியாக பொறுப்பேற்றார். அதனால் இந்த மறக்கமுடியாத நாளில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் அணிவகுப்பு நடைபெறும்.

    இராணுவ சேவையில் தியாகம் செய்த அனைவரையும் மூன்று சேவைத் தலைவர்கள் கௌரவிக்கின்றனர். மேலும், தேசிய போர் நினைவிடத்தில் ராணுவ வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

    இவ்விழா உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விழா நடைபெறுகிறது.இன்று 76-வது ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    ஜெனரல் மனோஜ் பாண்டே, தேச சேவையில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    "இந்த இராணுவ தினமான 2024ல், இந்திய இராணுவத்தின் அனைத்து தரவரிசைகள், சிவில் ஊழியர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேச சேவையில் தங்கள் உயிரைக் கொடுத்த வீரார்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கிறோம். அவர்களின் தியாகம் எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.இந்திய இராணுவம் 2024 ஐ "தொழில்நுட்பத்தில் இணைந்து செயலாற்றும் ஆண்டாக" இருக்கும்.இது இராணுவத்தின் திறன் தொழில்நுட்பத்தின் மாற்றத்திற்க்கு இணைந்து செயல்படும் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

    தேசிய உணர்வில் இந்திய ராணுவத்துக்கு தனி இடம் உண்டு. தேசம் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதியில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்."ஜெய் ஹிந்த்" என்று தனது உரையை முடித்தார்.

    மேலும் இராணுவ தினத்தை முன்னிட்டு, இந்திய இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ×