search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஞ்சி மைதானம்"

    • ராஞ்சி மைதானத்தில் இதுவரை 4 பேர் மட்டுமே சதமடித்துள்ளனர்.
    • ராஞ்சி மைதானத்தில் சதமடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார்.

    ராஞ்சி:

    இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

    முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 278 ரன்களை குவித்தது. அதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 45.5 ஓவர்களிலேயே 282 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் 113 ரன்களை விளாசினார். இதில் 15 பவுண்டரிகள் அடங்கும். 2022-ம் ஆண்டில் இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ஷ்ரேயாஸ் 458 ரன்களை குவித்துள்ளார்.

    இந்நிலையில் இந்த சதம் மூலம் முக்கிய சாதனையை அவர் படைத்துள்ளார். ராஞ்சி மைதானத்தில் சதமடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் விராட் கோலி மட்டுமே இந்த மைதானத்தில் சதமடித்திருந்தார்.

    2013-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 139 ரன்களும், 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 123 ரன்களையும் விராட் கோலி அடித்திருந்தார். வெளிநாட்டு வீரர்கள் இரண்டு பேர் இங்கு சதமடித்துள்ளனர். இலங்கையின் மேத்யூவ்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா ஆகியோர் சதமடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×