search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசகுல்லா"

    • சுவீட் என்றதுமே குலோப்ஜாமூனிற்கு என்று தனி இடம் உண்டு.
    • பிஸ்கட்டை வைத்து குலோப் ஜாமூன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    குலோப்ஜாமூன் என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும். சுவீட் என்றதும் குலோப் ஜாமூனிற்கு என்று தனி இடம் உண்டு. குலோப்ஜாமூன், ரசகுல்லா எல்லாம் ஒரே கேட்டகரியில் வரக்கூடிய இனிப்பு வகைகள். அந்த வகையில குலோப்ஜாமூன் என்று சொல்லும் போதே எல்லாருடைய நாக்கிலும் அதன் சுவை எச்சில் ஊற வைத்துவிடும். அந்த அளவுக்கு சுவையாக இருக்கும் குலோப்ஜாமூன்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் எல்லா கடைகளில் கிடைக்கும். அதை வாங்கித் தான் எல்லோரும் எப்பவுமே செய்துகொண்டு இருக்கிறோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பிஸ்கட்டை வைத்து குலோப் ஜாமூன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். அது என்னடா பிஸ்கட் குலோப் ஜாமூன் அப்படிங்கறிங்களா. சரி வாங்க பிஸ்கட் குலோப் ஜாமூன் எப்படி செய்யலாம் என்று தெரிஞ்சுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிஸ்கட்- 2 பாக்கெட்

    சர்க்கரை- 1 கப்

    ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை

    பால்- 1/2 கப்

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் மேரி பிஸ்கட் பாக்கெட்டில் உள்ள பிஸ்கட்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சர்க்கரை சேர்த்து, தண்ணீர் ஊற்றி சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும். அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு பொடித்து வைத்துள்ள பிஸ்கட் பவுடரில் பாலை சிறிது சிறிதாக சேர்த்து குலாப் ஜாமுன் உருண்டைகள் உருட்டும் பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக வெடிப்பு இல்லாமல் உருட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்

    பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு காய்ச்சி வைத்துள்ள சர்க்கரைப்பாகில் பொரித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து பாகை உறிந்த பின் சாப்பிட்டால் சுவையான பிஸ்கட் குலாப் ஜாமூன் தயார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோதலில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, இந்த தகவல் வெளியானது.

    திருமண நிகழ்ச்சி, சுபமுகூர்த்த நிகழ்ச்சி என்றால் அங்கு சுவையான உணவு வகைகள் பரிமாறப்படும். உணவு வகைகளுடன் இனிப்பு போன்ற பலகாரங்கள் வழங்கப்படும்.

    முதல் பந்தியில் அனைத்து வகை பலகாரங்கள் வைக்கப்படும். நேரம் செல்லசெல்ல தட்டுப்பாடு ஏற்பட்டு பந்திக்கு வரும் பலகாரங்கள் குறைந்து போகும். இவ்வாறு வரவில்லை என்றால் அதை பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கே பலகாரம் இல்லையா... பெண் வீட்டாருக்கே இல்லையா... நான் யார் தெரியுமா... என சண்டையை வலுக்கட்டாக இழுக்கும் நபர்களும் உண்டு.

    இதேபோன்ற சம்பவம் ஒன்று உத்தர பிரதேச மாநில ஆக்ராவில் நடைபெற்றுள்ளது. கடந்த ஞாயிறு இரவு ஷாம்சாபாத் பகுதியில் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது ரசகுல்லா தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஒருவர் கூற, அது திருமண நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் தீயாக பரவியது.

    எப்படி ரசகுல்லா தட்டுப்பாடு ஏற்படலாம் என வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபிறகு ஒரு வழியாக மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இந்த மோதலில் 6 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • திருமண விழாவில் சுமார் 200 பேர் உணவு சாப்பிட்ட நிலையில் 70 பேருக்கு உடல் நலம் பாதிப்பு.
    • சிலரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் கன்னோஜ் கிராமத்தில் நடைபெற்ற திருமண விருந்து ஒன்றில் சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 70 பேருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருமண விழாவில் சுமார் 200 பேர் உணவு சாப்பிட்ட நிலையில் அங்கு பரிமாறப்பட்ட ரசகுல்லா இனிப்பை சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

    இதில், அர்சூ (1), யூசுப் (2), ஷிஃபா (4), அஸ்ரா (5), சாசியா (7), இர்பான் கான் (48), சுல்தான் (52), மற்றும் ரியாசுதீன் (55) ஆகியோரின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து, மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் சக்தி பாசு கூறுகையில், "மாவட்ட மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளின் உடல் நிலை சீராக இருக்கிறது. சிலர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்றார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×